Most Runs in Test Cricket:2023ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர் விராட் கோலி முதலிடம்!
2023 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விராட் கோலி 785 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். உலக அளவில் அவர் 8ஆவது இடத்தில் இருக்கிறார்.
Virat Kohli
இந்தியா 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் பிப்ரவரி மாதமும், டி20 தொடர் நவம்பர் மாதமும் நடந்தது.
Virat Kohli 4th Place in Test Cricket Runs
ஆஸ்திரேலியா – பார்டர் கவாஸ்கர் டிராபி – 2023 - 4
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. மார்ச் மாதம் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியதன் மூலமாக இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
Virat Kohli Test Cricket
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023 - 1
இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Virat Kohli
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 2
இதைத் தொடர்ந்து ஜூலை மாதம் இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் சென்றது. இதில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் 1-0 என்று டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
India Tour of South Africa
இந்தியா டூர் ஆஃப் தென் ஆப்பிரிக்கா:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டி20 தொடரை இந்திய அணி 1-1 என்று சமன் செய்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
Virat Kohli 785 Runs in Test
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. இதில், நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Virat Kohli Test Runs
இதன் மூலமாக 2023 ஆம் ஆண்டை தோல்வியுடன் முடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வெற்றியோடு தொடங்கப்பட்ட நிலையில், தோல்வியோடு முடிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மட்டும் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
The Indian player who scored the most runs in Tests,
இந்த 9 போட்டிகளில் விராட் கோலி 14 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 785 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 186 ரன்கள் அடங்கும். மேலும், 2 சதமும், 3 அரைசதமும் அடித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 2ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் 550 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
Most Runs in Test Cricket
ஆனால் உலக அளவில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 1200 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். 2ஆவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், 3ஆவது இடத்தில் டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்த இடங்களில் மார்னஷ் லபுஷேன், ஜோ ரூட், ஹாரி ஃப்ரூக், கேன் வில்லியம்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Virat Kohli
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்களின் பட்டியலில் விராட் கோலி 4ஆவது இடம் பிடித்துள்ளார். 15,921 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 13,265 ரன்களுடன் 2ஆவது இடத்திலும், சுனில் கவாஸ்கர் 10122 ரன்களுடன் 3ஆவது இடத்திலும், 8790 ரன்களுடன் விராட் கோலி 4ஆவது இடத்திலும், விவிஎஸ் லட்சுமணன் 8781 ரன்களுடன் 5ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.
Virat Kohli Record in Calender Year
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ஒரே காலண்டர் இயரில் விராட் கோலி 2000 க்கும் அதிகமாகவே ரன்கள் குவித்துள்ளார்.
2012: 2186 ரன்கள்
2014: 2286 ரன்கள்
2016: 2595 ரன்கள்
2017: 2818 ரன்கள்
2018: 2735 ரன்கள்
2019: 2455 ரன்கள்
2023: 2048 ரன்கள்
கிரிக்கெட் வரலாற்றில் 7 வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 2000க்கும் அதிகமாக ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி என்ற பெருமையை பெற்றுள்ளார்.