MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Suryavanshi: ஐபிஎல் 2026 தொடரில் உலககையே திரும்பி பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி 700 ரன்கள் அடிப்பேன் என்று முன்கூட்டியே எழுதி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Jun 02 2026, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி
Image Credit : ANI

ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் இளம் பேட்டிங் புயல் 15 வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026 தொடரில் பல விருதுகளை வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிறந்த வீரராக நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால், தனது ஆட்டத்தில் என்னென்ன முன்னேற்றங்கள் தேவை என்பதை இந்த சீசன் கற்றுக் கொடுத்ததாக அவர் கூறினார். இனிவரும் காலங்களில் அதில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே 700 ரன்கள் எடுக்க வேண்டும் என்று தனது போனில் உள்ள நோட்ஸ் செயலியில் ஒரு தனிப்பட்ட இலக்கை எழுதி வைத்திருந்ததாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அந்த இலக்கை எட்டுவதற்கான நிலையை சரிபார்த்து வந்ததாகவும், தொடரில் வெற்றிகரமாக செயல்பட்டதுடன் இந்த இலக்கை எட்டியது தனக்கு திருப்தி அளித்ததாகவும் அவர் கூறினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்
Image Credit : BCCI

முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்

"இந்த விருதுகளை எல்லாம் வென்றது ஒரு சிறந்த உணர்வு. இந்த சீசனில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். களத்திலும், களத்திற்கு வெளியேயும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. நான் நீண்ட காலம் விளையாட விரும்பினால், சில விஷயங்களில் நான் உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே, இனி அதுதான் என் கவனமாக இருக்கும், வரவிருக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்.

ஐபிஎல் சீசனுக்கு முன்பு, என் போனில் உள்ள நோட்ஸ் செயலியில் இந்த ஐபிஎல் சீசனில் 700 ரன்கள் அடிக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தேன். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், நான் எங்கே இருக்கிறேன் என்று சரிபார்ப்பேன், அது நான் அடைய முடிந்த ஒரு இலக்கு," என்று சூர்யவன்ஷி ஜியோஹாட்ஸ்டாரில் கூறினார்.

Related Articles

Related image1
IPL 2026: அதிக சிக்சர்கள் நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி! அதிவேக சதம், அரை சதம் விளாசியது யார் தெரியுமா?
Related image2
Vaibhav Suryavanshi:15 வயதில் லட்சக்கணக்கில் பரிசுத்தொகை + சொகுசு கார்! 5 விருதுகளை தட்டித்தூக்கி வைபவ் சூர்யவன்ஷி சாதனை
34
5 விருதுகளை அள்ளிய வைபவ் சூர்யவன்ஷி
Image Credit : Vaibhav Suryavanshi Instagram

5 விருதுகளை அள்ளிய வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026 தொரில் வைபவ் சூர்யவன்ஷி பெரும்பாலான விருதுகளை வென்று அசத்தினார். தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர், வளர்ந்து வரும் வீரர், சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர், ஆரஞ்சு கேப் வெற்றியாளர் மற்றும் சீசனின் சூப்பர் சிக்ஸர்ஸ் ஆகிய விருதுகளை அவர் தட்டிச் சென்றார். வைபவ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு அசாதாரணமான தொடரில் விளையாடி, 776 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 237.30 என்பது குறிப்பிடத்தக்கது.

44
72 சிக்சர்கள் விளாசி சாதனை
Image Credit : ANI

72 சிக்சர்கள் விளாசி சாதனை

சூர்யவன்ஷியின் நிலையான ஆட்டம், குறிப்பாக சாதனை படைத்த 72 சிக்ஸர்கள், பல நீண்டகால ஐபிஎல் சாதனைகளை முறியடிக்க உதவியது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களில் ஒருவராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

வெறும் 15 வயதில், சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்சு கேப் வென்ற இளம் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு, குஜராத் டைட்டன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் சுதர்சன் 2025-ல் 23 வயது மற்றும் 231 நாட்களில் இந்த சாதனையை படைத்திருந்தார். சுப்மன் கில் 2023-ல் 23 வயது மற்றும் 263 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல்
ராஜஸ்தான் ராயல்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG Test: இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்தியா பிளேயிங் லெவன்! அறிமுக வீரர்களுக்கு ஜாக்பாட்!
Recommended image2
Tim David: ஐஸ் பேக்கை வீசியதால் சிக்கல்! அடுத்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாடத் தடை!
Recommended image3
RCB ரசிகர்களின் வெறிச்செயல்: அடித்து நொறுக்கப்பட்ட போலீஸ் பேரிகேடுகள்! வைரலாகும் வீடியோக்கள்!
Related Stories
Recommended image1
IPL 2026: அதிக சிக்சர்கள் நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி! அதிவேக சதம், அரை சதம் விளாசியது யார் தெரியுமா?
Recommended image2
Vaibhav Suryavanshi:15 வயதில் லட்சக்கணக்கில் பரிசுத்தொகை + சொகுசு கார்! 5 விருதுகளை தட்டித்தூக்கி வைபவ் சூர்யவன்ஷி சாதனை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved