- Home
- Sports
- Sports Cricket
- Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Vaibhav Suryavanshi: ஐபிஎல் 2026 தொடரில் கலக்கி வரும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ஏ அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி
இலங்கையில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் முத்தரப்பு தொடருக்கான இந்தியா A அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தேர்வுக் குழு இன்று அறிவித்துள்ளது. இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் திலக் வர்மா இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரியான் பராக், இந்த முத்தரப்பு தொடருக்கான துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 2026 ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் அசத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி
இந்தியா A அணிக்கு தேர்வாகியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, இந்த ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 440 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்ததும், முத்தரப்பு தொடருக்காக அவர் இலங்கை பயணம் மேற்கொள்வார். வைபவ் சூர்யவன்ஷி தனது 12 வயதிலேயே பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார். மிக இளம் வயதிலேயே முதல் தர கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார்.
அன்ஷுல் கம்போஜ்க்கு அணியில் இடம்
இந்தியாவின் U-19 அணி கோப்பையை வெல்ல இவர் முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டி உட்பட தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு கோப்பையை வென்று தந்தவர் வைபவ் சூர்யவன்ஷி என்பது குறிப்பிடத்தக்கது. முத்தரப்பு தொடருக்கான இந்திய ஏ அணியில் பிரியான்ஷ் ஆர்யா, ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், யாஷ் தாக்கூர், யுத்விர் சிங், அன்ஷுல் கம்போஜ் மற்றும் அர்ஷத் கான் என பல திறமையான மற்றும் உள்ளூர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர்கால சர்வதேச போட்டிகளுக்காக இளம் திறமைகளை உருவாக்கும் இந்தியாவின் முயற்சி தெளிவாக தெரிகிறது.
இந்திய ஏ அணி வீரர்கள்
இந்த முத்தரப்பு தொடரில் தொடரை நடத்தும் இலங்கை A, இந்தியா A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் மோதுகின்றன. இந்த ஒருநாள் தொடர் முடிந்த பிறகு, இந்தியா A அணி, இலங்கை A அணியுடன் இரண்டு பல-நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான அணி விவரம் பின்னர் அறிவிக்கப்படும். முத்தரப்பு தொடருக்கான இந்தியா A அணி: திலக் வர்மா (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (துணை கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), விப்ராஜ் நிகம், யாஷ் தாக்கூர், யுத்விர் சிங், அன்ஷுல் கம்போஜ் மற்றும் அர்ஷத் கான்.

