MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

15 வயதிலேயே பிரபலம் ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷிக்கு காயம் ஏற்பட்டுள்ளது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Apr 26 2026, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வைபவ் சூர்யவ்ன்ஷி மிரட்டல் சதம்
Image Credit : ANI

வைபவ் சூர்யவ்ன்ஷி மிரட்டல் சதம்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 228 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டல் சதம் விளாசினார். அவர் வெறும் 37 பந்துகளில் 12 சிக்சர்கள், 5 பவுண்டரியுடன் 103 ரன்கள் விளாசினார். பின்பு பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழந்து 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
வைபவ் சூர்யவ்ன்ஷிக்கு காயம்
Image Credit : Getty

வைபவ் சூர்யவ்ன்ஷிக்கு காயம்

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றாலும் வைபவ் சூர்யவன்ஷி அடித்த மிரட்டல் சதம் தான் இப்போது உலகம் முழுவதும் பேச்சாக உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் வைபவ் இதுவரை 8 போட்டிகளில் 357 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இப்படி 15 வயதிலேயே பிரபலம் ஆன வைபவ் சூர்யவன்ஷிக்கு காயம் ஏற்பட்டுள்ளது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பீல்டிங் செய்தபோது அவருக்கு தொடை நரம்புப் பிடிப்பு போன்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரால் நடக்க முடியாத நிலையில், பிசியோக்கள் உதவியுடன் அவர் களத்தில் இருந்து வெளியே சென்றார்.

காயம் எப்படி இருக்கு?

சூப்பராக விளையாடிக் கொண்டிருந்த வைபவ் சூர்யவன்ஷி, யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை. இப்போது காயம் அடைந்துள்ளார். இந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு வைபவ் தற்போது நலமாக இருப்பதாகவும் அவருக்கு தொடை நரம்பில் பிடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதலில் கவலைகள் இருந்ததாகவும், ஆனால் தற்போதைய நிலையில் அது தீவிரமானதாகத் தெரியவில்லை என்றும், வரும் நாட்களில் இதுகுறித்து தெளிவான நிலவரம் தெரியவரும் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
Related image2
வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு இதுதான் காரணமா? பிறந்த தேதி சொல்லும் வியக்க வைக்கும் ரகசியம்!
34
ராஜஸ்தான் அணி சொல்வது என்ன?
Image Credit : BCCI

ராஜஸ்தான் அணி சொல்வது என்ன?

இது தொடர்பாக பேசிய ராஜஸ்தான் அணியின் துணைப் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ''வைபவ் பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியுமோ, அதை ஏற்கனவே சொல்லிவிட்டோம். அவர் ஒரு ஸ்பெஷலான வீரர். அவருக்கு தொடை நரம்புப் பிடிப்பு போன்ற ஒரு பிரச்சினை தெரிந்தது, ஆனால் இப்போது அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், ஓரிரு நாட்களில் அது தீவிரமானதா இல்லையா என்பது தெரிந்துவிடும். தற்போதைக்கு அப்படித் தெரியவில்லை'' என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல்

விக்ரம் ரத்தோர் சூர்யவன்ஷியின் காயம் தீவிரமானதா? இல்லையா? என்பது இப்போது தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி அடுத்த ஆட்டத்தில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும் இதே காயத்தால் தான் பல போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆகவே வைபவ் சூர்யவன்ஷி காயம் தீவிரத் தன்மையாக இருந்தால் அவரால் நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

44
பேட் கம்மின்ஸ் பாராட்டு
Image Credit : ANI

பேட் கம்மின்ஸ் பாராட்டு

இதற்கிடையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ், இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை தனது 'புதிய ஃபேவரைட் ப்ளேயர்' என்று பாராட்டியுள்ளார். வைபவின் அதிரடி ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய பேட் கம்மின்ஸ், ''அவர்தான் (வைபவ்) என் புது ஃபேவரைட் ப்ளேயர்னு நினைக்கிறேன். அவர் பந்தை அடிக்குற வேகத்தைப் பார்க்கவே சூப்பராக உள்ளது. ஒரு பவுலரா நீங்க ரொம்ப துல்லியமா பந்துவீசணும். கொஞ்சம் மிஸ் பண்ணாலும், பந்து பவுண்டரிக்கு வெளியதான் போகும்" என்று கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sanju Samson: மின்னல் வேக ஸ்டம்பிங்.. களத்தில் வெடித்த வாக்குவாதம்..! பிளே-ஆஃப்க்குள் நுழைந்த SRH
Recommended image2
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image3
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Related Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
Recommended image2
வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு இதுதான் காரணமா? பிறந்த தேதி சொல்லும் வியக்க வைக்கும் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved