MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Vaibhav Suryavanshi: நெருப்போடு மோதிட்டீங்க! என்னா அடி! இலங்கை பவுலர்களை கதறவிட்டு வைபவ் சூர்ய்வன்ஷி உலக சாதனை!

Vaibhav Suryavanshi: நெருப்போடு மோதிட்டீங்க! என்னா அடி! இலங்கை பவுலர்களை கதறவிட்டு வைபவ் சூர்ய்வன்ஷி உலக சாதனை!

Vaibhav Suryavanshi: இலங்கை ஏ அணிக்கு எதிரான பைனலில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 28 பந்துகளில் 94 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு இலங்கை வீரர்கள் வைபவ்வை வம்புக்கு இழுத்த நிலையில், அதற்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 21 2026, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா ஏ, இலங்கை ஏ பைனல்; வைபவ் சூர்ய்வன்ஷி அதிரடி
Image Credit : Asianet News

இந்தியா ஏ, இலங்கை ஏ பைனல்; வைபவ் சூர்ய்வன்ஷி அதிரடி

இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டி தம்புலாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி இப்போது வரை 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய இளம் புயல் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 28 பந்துகளில் 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வைபவ் சூர்ய்வன்ஷி உலக சாதனை
Image Credit : Getty

வைபவ் சூர்ய்வன்ஷி உலக சாதனை

வெறும் 6 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட வைபவ் சூர்யவன்ஷி இலங்கை ஏ அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில், பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். அவர் வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதற்கு முன்பு, இலங்கையின் கௌஷல்யா வீரரத்ன 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 28 பந்துகளில் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிவேக சதம் அடித்த சாதனை ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் பெயரில் உள்ளது. அவர் 29 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு வைபவுக்கு இருந்தது, ஆனால் அவர் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

Related Articles

Related image1
Vaibhav Suryavanshi: யார் கண் பட்டதோ? தொடர்ந்து சொதப்பும் வைபவ் சூர்யவன்ஷி.. அம்பலமான பலவீனம்!
Related image2
Vaibhav Sooryavanshi: என்னை சின்ன பையன்னு நினச்சீங்களா..? இலங்கை வீரர்களுடன் மல்லுக்கட்டிய வைபவ்
34
வைபவ்வை ஸ்லெட்ஜிங் செய்த இலங்கை வீரர்கள்
Image Credit : Asianet News

வைபவ்வை ஸ்லெட்ஜிங் செய்த இலங்கை வீரர்கள்

இன்றைய இறுதிப்போட்டியில் சிக்சர் மழை பொழிந்து தனது அதிரடியால் இலங்கை வீரர்களை கதற விட்ட வைபவ் சூர்யவன்ஷி சில நாட்களுக்கு முன்பு தான் பட்ட அவமானத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்து விட்டார். இந்த தொடரின் லீக் சுற்றில் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றி பெற்றது. இந்தியா ஏ அணி தோல்வி அடைந்தவுடன் சில இலங்கை வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியை நோக்கி ஓடிவந்து ஆக்ரோஷமாகக் கத்தி, எல்லை மீறி ஸ்லெட்ஜிங் (Sledging) செய்தனர். "இது ஐபிஎல் (IPL) கிடையாது, கிளம்பி வீட்டுக்கு போ!" என்பது போன்ற வார்த்தைகளால் அவர்கள் வம்புக்கு இழுத்ததாக கூறப்படுகிறது.

44
வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்த வைபவ் சூர்ய்வன்ஷி
Image Credit : X

வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்த வைபவ் சூர்ய்வன்ஷி

இதனால் ஆத்திரம் அடைந்த வைபவ் சூர்யவன்ஷி பொறுமை இழந்து இலங்கை வீரர்களை நோக்கித் பாய்ந்தார். வார்த்தைப்போர் முற்றிய நிலையில், வைபவ் சூர்யவன்ஷி ஒரு இலங்கை வீரரை ஆக்ரோஷமாக கைகளால் பிடித்து தள்ளிவிட்டார். நிலைமை மோசமான நிலையில், இலங்கை அணியின் மூத்த வீரர் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் இந்திய வீரர்கள் விரைந்து வந்து வைபவ் சூர்யவன்ஷியை தடுத்து, சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

இதில் இலங்கை தரப்பினர் வைப்வுக்கும், இந்திய தரப்பினர் இலங்கை வீரர்களுக்கும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தான் பட்ட அவமானத்திற்கும், ஸ்லெட்ஜிங்கிற்கும் தற்போது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசி இலங்கை பவுலர்களை கதறவிட்டு பழிவாங்கியுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வைபவ் சூர்யவன்ஷி
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jaiswal Century: ஜெய்ஸ்வால் சதம், ஹிட்மேன் அதிரடி; ஆப்கானிஸ்தானை ஊதித்தள்ளி தொடரை வென்றது இந்தியா
Recommended image2
Women T20 World Cup: கடைசி நேர த்ரில்.. கையை விட்டுப்போன போட்டியை தலைகீழாக மாற்றிய நியூசிலாந்து!
Recommended image3
Shreyanka Patil: மகளிர் டி20 உலகக்கோப்பை.. மேட்ச் வின்னர் காயத்தால் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு!
Related Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: யார் கண் பட்டதோ? தொடர்ந்து சொதப்பும் வைபவ் சூர்யவன்ஷி.. அம்பலமான பலவீனம்!
Recommended image2
Vaibhav Sooryavanshi: என்னை சின்ன பையன்னு நினச்சீங்களா..? இலங்கை வீரர்களுடன் மல்லுக்கட்டிய வைபவ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved