- Home
- Sports
- Sports Cricket
- இந்தியா-இங்கிலாந்து தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!
இந்தியா-இங்கிலாந்து தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் யார்? யார்? என்பது குறித்த முழு பட்டியலை பார்க்கலாம்.

IND vs ENG test Series! Top Run Scorers and Wicket Takers List
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. 2வது இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதனால் 374 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சாதனை
இதன்மூலம் 5 போட்ட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2 2 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட்ட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத இளம் வீரர்களை கொண்ட அணியே களமிறங்கியது. நம்பர் 1 பவுலர் பும்ராவும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனாலும் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை டிரா செய்துள்ளனர்.
சுப்மன் கில் நம்பர் 1
இந்த தொடரில் கேப்டன் சுப்மன் கில், ஜடேஜா, சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் தங்களது கணிசமான பங்களிப்பு அளித்துள்ளனர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சுப்மன் கில் உள்ளார். அதாவது அவர் ஐந்து போட்டிகளில் நான்கு சதங்கள் உட்பட 754 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். 5வது டெஸ்ட்டில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 537 ரன்களுடன் கே.எல். ராகுலை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்தார்.
ஜடேஜா, ராகுல் அசத்தல்
ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்கள் உட்பட 532 ரன்கள் எடுத்த இந்திய வீரர் கே.எல். ராகுல் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். ஐந்து போட்டிகளில் 516 ரன்கள் எடுத்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நான்காவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். 5வது டெஸ்ட்டில் அதிரடி சதம் அடித்ததன் மூலம் ஹாரி புரூக் 479 ரன்களுடன் ஐந்தாம் இடத்தைப் பிடித்தார்.
முகமது சிராஜின் ஆதிக்கம்
பவுலர்களை பொறுத்தவரை முகமது சிராஜ் 185.3 ஓவர்கள் வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங் 3 போட்டிகளில் 19 விக்கெட் வீழ்த்தி 2வது இடத்திலும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி 3வது இடத்திலும் உள்ளனர்.
மூன்று டெஸ்ட்களில் மட்டும் விளையாடிய பும்ரா 14 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார். மூன்று டெஸ்ட்களில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 5வது இடம் பிடித்துள்ளார்.