பள்ளிக்கூடம் செல்லும் வயதில் IPLல் அசத்திய இளம் வீரர்கள்
ஐபிஎல் வரலாற்றில் இளம் வீரர்கள் டாப் 5: ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ் சூர்யவன்ஷி, 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய இளம் வீரர்கள் டாப் 5 பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் தெரியுமா?

Vaibhav Suryavanshi
ஐபிஎல் வரலாற்றில் இளம் வீரர்கள்: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வருகையால், பல இளம் வீரர்களுக்கு கிரிக்கெட்டில் தங்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி.. ஐபிஎல் போட்டிகளில் அசத்தி தேசிய அணியில் இடம் பிடிக்கின்றனர். இப்படி பல வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இளம் வயதிலேயே தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது மற்றொரு இளம் வீரர் ஐபிஎல் போட்டிகளில் காலடி எடுத்து வைத்துள்ளார். முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். அவர் தான் ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
2024 நவம்பரில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. லக்னோ அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் பந்திலேயே வைபவ் சிக்ஸர் அடித்தார். அவர் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 34 ரன்கள் எடுத்தார். வைபவ் சூர்யவன்ஷி உள்பட ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய இளம் வீரர்கள் டாப் 5 பட்டியலை இங்கு காணலாம்.
Vaibhav Suryavanshi
1. வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் வரலாற்றில் களமிறங்கிய இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். 2024ல் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர், 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
Prayas re burman
2. ப்ரயாஸ் ரே பர்மன்
2019ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இரண்டாவது இளம் வீரர் ப்ரயாஸ் ரே பர்மன். 16 வயது 157 நாட்களில் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கினார். எனினும், அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
Mujeeb ur Rahman
3. முஜீப் உர் ரஹ்மான்
ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய இளம் வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான். 2018ல் 17 வயது 11 நாட்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். அந்த ஏலத்தில் ரூ.4 கோடிக்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
Riyan Parag
4. ரியான் பராக்
இந்தியன் பிரீமியர் லீக்கில் அறிமுகமான நான்காவது இளம் வீரர் ரியான் பராக். 17 வயது 152 நாட்களில் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கினார். 2019ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியது. தற்போது ஐபிஎல் போட்டிகளில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றுள்ளார்.
Pradeep Sangwan
5. பிரதீப் சங்வான்
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக முக்கிய பங்கு வகித்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வான், ஐபிஎல் தொடக்க சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணியுடன் ஒப்பந்தம் செய்தார். அப்போது அவருக்கு 17 வயது 179 நாட்கள்.