ஐபிஎல்லில் அதிவேகமாக சதம் அடித்த டாப் 10 வீரர்கள்

First Published 12, Mar 2020, 4:39 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குவதாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் விளைவாக ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஐபிஎல் நடக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஐபிஎல்லில் தங்களது ஆஸ்தான வீரர்களின் அதிரடியான பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐபிஎல்லில் அதிவேகமாக சதமடித்த டாப் 10 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
 
1. கிறிஸ் கெய்ல் - 30 பந்தில் சதம்  2013ம் ஆண்டு ஆர்சிபி அணியில் ஆடியபோது புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 30 பந்தில் சதமடித்தார் கெய்ல். அதுதான் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதமாக திகழ்கிறது.

2. யூசுஃப் பதான் - 37 பந்தில் சதம்  2010ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய யூசுஃப் பதான், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்தில் அடித்த சதம் தான், ஐபிஎல்லின் இரண்டாவது அதிவேக சதம்.

3. டேவிட் மில்லர் - 38 பந்தில் சதம்  2013ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடிய தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர், ஆர்சிபி அணிக்கு எதிராக 38 பந்தில் சதமடித்தார்.

4. ஆடம் கில்கிறிஸ்ட் - 42 பந்தில் சதம்  டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கில்கிறிஸ்ட், 2008ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 42 பந்தில் அடித்த சதம் தான், ஐபிஎல்லில் நான்காவது வேகமான சதம்.

5. ஏபி டிவில்லியர்ஸ் -  43 பந்தில் சதம்  ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ், 2016 சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 43 பந்தில் சதமடித்து அசத்தினார்.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், 2017ல் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 8 பவுண்டரிகள் 10 சிக்ஸர்களுடன் 43 பந்தில் சதமடித்தார்.

7. சனத் ஜெயசூரியா - 45 பந்தில் சதம்  2008ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய இலங்கை முன்னாள் ஜாம்பவான் ஜெயசூரியா, சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 45 பந்தில் சதமடித்து மிரட்டினார். ஐபிஎல் முதல் சீசனிலேயே ஜெயசூரியா அதிரடி சதமடித்து அசத்தினார்.

8. முரளி விஜய் - 46 பந்தில் சதம்  சிஎஸ்கே அணிக்காக 2010ல் ஆடியபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்தில் சதமடித்து அசத்தினார் தமிழக வீரர் முரளி விஜய். இப்படி அதிரடியாக ஆடிய அவருக்கு, இப்போது சிஎஸ்கே அணியில் ஆடும் லெவனில் இடம் கிடைப்பதேயில்லை.

9, 10. கிறிஸ் கெய்ல் - 46 பந்தில் சதம்  ஆர்சிபி அணிக்காக ஆடிய கிறிஸ் கெய்ல், 2011 மற்றும் 2015 ஆகிய இரண்டு சீசன்களிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டிகளில், அந்த இரண்டு போட்டிகளிலும் 46 பந்தில் சதமடித்தார். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கிறிஸ் கெய்ல், கடைசி இரண்டு இடங்களிலும் அவர் தான் இருக்கிறார்.

loader