MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தல தோனி இடத்தை பிடிக்கப்போகும் அந்த தளபதி யார்? சிஎஸ்கே-வின் பிளேயிங் லெவன் இதோ!

தல தோனி இடத்தை பிடிக்கப்போகும் அந்த தளபதி யார்? சிஎஸ்கே-வின் பிளேயிங் லெவன் இதோ!

தல தோனி ஐபிஎல்லில் 2 வாரம் விளையாட மாட்டார் என அறிவிக்கப்படுள்ளது. தோனி இல்லாமல் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Mar 28 2026, 03:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார்
Image Credit : ANI

2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார்

ஐபிஎல் தொடர் தொடங்கும் நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முக்கிய வீரரான எம்.எஸ். தோனி, காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இன்று இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. திங்கட்கிழமை மாலை கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக CSK தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது நிலையில் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24
சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு
Image Credit : Getty

சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு

'எம்.எஸ். தோனி தற்போது கால் தசைப்பிடிப்பு காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஐபிஎல் 2026-ன் முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் விளையாட வாய்ப்பில்லை. விரைவில் குணமடையுங்கள், தலைவா' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தோனி இல்லாததால், இந்திய வீரர் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பார். தோனியின் அடுத்த வாரிசாகவே சஞ்சுவை அணி நிர்வாகம் பார்க்கிறது. கடந்த டிசம்பர் ஏலத்திற்கு முன்பு, ஒரு பெரிய டிரேடு மூலம் சஞ்சு சென்னை அணிக்கு வந்தார். ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து, CSK சஞ்சுவை வாங்கியது.

Related Articles

Related image1
தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடப்போகுது.. அப்போ அடுத்த விக்கெட் கீப்பிங் யார்?
Related image2
MS Dhoni: ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! தோனி விளையாடமாட்டார் என அறிவித்த CSK - காரணம் என்ன?
34
ரசிகர்களுக்கு ஆறுதல்
Image Credit : Instagram

ரசிகர்களுக்கு ஆறுதல்

2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த சீசனில் சென்னை அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி, 135.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 196 ரன்கள் எடுத்தார். கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தபோது, தோனியே அணியை வழிநடத்தினார். இப்போது தோனியின் காயம் சென்னை அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், சஞ்சு சாம்சன் போன்ற ஒரு திறமையான வீரர் அணியில் இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.

அஸ்வின் கணிப்பு

சிஎஸ்கேவில் தோனி இல்லாத இடத்தில் அந்த இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், கார்த்திக் ஷர்மா போன்ற இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதிரடி ஆட்டக்காரர் கார்த்திக் சர்மா அந்த இடத்தில் சரியாக பொருந்துவார் என்று கூறியுள்ளார்.

44
சிஎஸ்கே பிளேயிங் லெவன்
Image Credit : Getty

சிஎஸ்கே பிளேயிங் லெவன்

அஸ்வின் சொன்ன தோனி இல்லாத சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ: ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன், உர்வில் படேல், டெவால் ப்ரேவெஸ், ஷிவம் துபே, சர்ப்ராஷ் கான் அல்லது ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் ஷர்மா, அகில் ஹுசைன், நூர் அகமது மேட் ஹென்ரி, கலீல் அகமது, அன்ஹுல் கம்போஜ்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எம். எஸ். தோனி சி.எஸ்.கே
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடப்போகுது.. அப்போ அடுத்த விக்கெட் கீப்பிங் யார்?
Recommended image2
MS Dhoni: ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! தோனி விளையாடமாட்டார் என அறிவித்த CSK - காரணம் என்ன?
Recommended image3
கேப்டன் பதவியால் வந்த கோபமா? லைவ் மேட்ச்சில் ரோஹித் ஷர்மா செய்த காரியம் - மிரண்டு போன ரசிகர்கள்!
Related Stories
Recommended image1
தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடப்போகுது.. அப்போ அடுத்த விக்கெட் கீப்பிங் யார்?
Recommended image2
MS Dhoni: ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! தோனி விளையாடமாட்டார் என அறிவித்த CSK - காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved