"தல அஜித்" ரசிகர்கள்னா சும்மாவா.. ஆஸ்திரேலியால காட்டுன வெயிட்டு மொத்த உலகமும் உச்சி முகர்ந்த நடராஜன் சம்பவம்.!
First Published Dec 9, 2020, 8:11 AM IST
இந்திய அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்காக நடிகர் அஜித் ரசிகர்கள் ஆஸ்திரேலிய மைதானத்தில் பெரிய அளவில் கட் அவுட்களை வைத்தது வைரலாகி உள்ளது.ஆஸ்திரேலியாவில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்

இந்த நிலையில் இந்தப் போட்டியை நேரில் பார்க்க பார்வையாளர்களாக சிட்னி மைதானத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், அஜித் மற்றும் நடராஜன் இணைந்திருக்கும் பதாகையை கையில் வைத்து, மைதானத்தை தெறிக்க வைத்தனர் . இன்னும் கொஞ்ச நேரத்துல அலப்பறை ஆரம்பம், தல மாஸை பார்ப்பீங்க என்று முன்கூட்டியே ட்விட்டரில் தல ரசிகர்கள் பதிவிட்டிருந்தனர்

முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார். நடராஜனை தமிழகம் மட்டுமின்றி மொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?