- Home
- Sports
- Sports Cricket
- தென் ஆப்பிரிக்காவை வீழத்தி ஃபைனலுக்கு சென்ற நியூசிலாந்து: கடைசி வரை போராடி சதம் விளாசிய மில்லர்!
தென் ஆப்பிரிக்காவை வீழத்தி ஃபைனலுக்கு சென்ற நியூசிலாந்து: கடைசி வரை போராடி சதம் விளாசிய மில்லர்!
NZ vs SA 2nd Semi Final ICC Champions Trophy 2025 : தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

NZ vs SA 2nd Semi Final ICC Champions Trophy 2025 :தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சனின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் குவித்தது.
South Africa vs New Zealand, ICC Champions Trophy 2025
இதையடுத்து கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ரியான் ரிக்கல்டன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுமையாக விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Champions Trophy 2025 SA vs NZ 2nd Semi Final
இதே போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசிவ் வாண்டர் டூசென் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களும் விளாசினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் ஹென்றி கிளாசென் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எய்டன் மார்கரம் 31 ரன்கள் எடுத்தார்.
ICC Champions Trophy 2025
பாட்டம் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் பார்ட்னர்ஷிப் கொடுக்காத நிலையில் கடைசி வரை போராடிய டேவிட் மில்லர் மட்டும் சதம் விளாசி சாதனை படைத்தார். அவர், 67 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இறுதி போட்டி வாய்ப்பை இழந்தது.
South Africa vs New Zealand 2nd Semi-Final
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய மகிழ்ச்சியோடு நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு சென்றது. வரும் 9ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப் பொட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னதாக இரு அணிகளும் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது. New zealand advanced to the final after winning the ICC Champions Trophy 2025 semi-final against South Africa.