உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி அறிவிப்பு; 17 மாதங்களுக்கு பிறகு எண்ட்ரி கொடுக்கும் ரஹானே!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இதையடுத்து, இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா நம்பியிருந்தது. இதில், இலங்கை அணி தோல்வியடையவே இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு நிறைவேறியது.
அஜின்க்யா ரஹானே
இதன் மூலமாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
WTC Final: இந்திய அணி அறிவிப்பு
இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்க்க இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா இந்த முறை தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி அறிவிப்பு:
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 17 மாதங்களுக்குப் பிறகு அஜின்க்யா ரஹானே தனது திறமையின் மூலமாக மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி:
1. ரோகித் சர்மா
2. சுப்மன் கில்
3. சட்டீஸ்வர் புஜாரா
4. விராட் கோலி
5. அஜின்க்யா ரஹானே
6. கேஎல் ராகுல்
7. கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்)
8. ரவிச்சந்திரன் அஸ்வின்
9. ரவீந்திர ஜடேஜா
10. அக்ஷர் படேல்
11. ஷர்துல் தாக்கூர்
12. முகமது ஷமி
13. முகமது சிராஜ்
14. உமேஷ் யாதவ்
15. ஜெயதேவ் உனத்கட்