ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: முதலிடத்தில் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் அணிகள், ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அணிகள் பெறும் வெற்றி விகிதத்தின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில், 70 சதவிகிதத்துடன் நியூசிலாந்து அணி ஏற்கனவே ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. இந்தியா இங்கிலாந்து இடையே நடந்துவரும் டெஸ்ட் தொடர் தான் ஃபைனலுக்கு முன்னேறும் 2வது அணியை தீர்மானிக்கும் தொடர். முதல் டெஸ்ட்டில் தோற்ற இந்திய அணி, 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட்டில் இந்திய அணி இன்று வென்றது.
இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 71 வெற்றி சதவிகிதத்துடன் முதலிடத்திற்கு முன்னேறியது. ஆனாலும் கடைசி டெஸ்ட்டில் வெற்றியோ, டிராவோ செய்தால்தான் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும். இங்கிலாந்து அணி ஃபைனல் வாய்ப்பை இழந்துவிட்டாலும், கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து ஜெயித்தால், ஆஸி., அணி ஃபைனலுக்கு முன்னேறும்.