#IPL2021Auction ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள்
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் தொடங்குகிறது. 292 வீரர்கள் ஏலத்தில் விடப்படுகின்றனர். இவர்களில் 164 பேர் இந்திய வீரர்கள்.
உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரை வென்ற தமிழ்நாடு அணியில் அசத்திய இளம் திறமையான வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். ஹரி நிஷாந்த்(பேட்ஸ்மேன்), அருண் கார்த்திக்(பேட்ஸ்மேன்), ஷாருக்கான்(பேட்ஸ்மேன் - ஃபினிஷர்), சோனு யாதவ்(மித வேகப்பந்துவீச்சாளர்), சித்தார்த் மணிமாறன்(ஸ்பின்னர்), பாபா அபரஜித்(பேட்ஸ்மேன்), முரளி விஜய்(பேட்ஸ்மேன்) ஆகிய தமிழக வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் ஷாருக்கான், சோனு யாதவ், ஹரி நிஷாந்த், சித்தார்த் மணிமாறன், அருண் கார்த்திக் ஆகிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் விலைபோவது உறுதி. இவர்கள் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக அபாரமாக ஆடி அசத்திவருகின்றனர்.