T20 World Cup 2026: உலகக்கோப்பை தொடரில் சதம் அடித்த அதிரடி பேட்ஸ்மேன்கள்
டி20 உலகக் கோப்பையில் சதம் அடிப்பது என்பது ஒவ்வொரு பேட்ஸ்மேனின் கனவாகும். 2007-ல் தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 11 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ் கெய்ல் இரண்டு முறை சதம் அடித்துள்ளார். இந்த சாதனையை படைத்த 10 வீரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...

கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ் - 2007)
உலகக் கோப்பை வரலாற்றில் முதல் சதத்தை அடித்தவர் 'யுனிவர்சல் பாஸ்' கிறிஸ் கெய்ல். தொடக்க உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார் கெய்ல்.
இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர்
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் கிறிஸ் கெய்ல் மட்டுமே. 2007-ல் தென்னாப்பிரிக்காவுக்குப் பிறகு, 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராகவும் (100*) இந்த சாதனையை மீண்டும் செய்தார்.
சுரேஷ் ரெய்னா (இந்தியா - 2010)
டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ரெய்னா. 2010-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். தற்போது இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்தியரும் ரெய்னாதான்.
மகேல ஜெயவர்த்தனே (இலங்கை - 2010)
இலங்கையின் பேட்டிங் ஜாம்பவான் மகேல ஜெயவர்த்தனே 2010-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 100 ரன்கள் எடுத்து இந்தப் பட்டியலில் இடம்பிடித்தார்.
பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து - 2012)
டி20 உலகக் கோப்பையில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் மெக்கல்லம் பெயரில் உள்ளது. 2012-ல் வங்கதேசத்துக்கு எதிராக 123 ரன்கள் குவித்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து - 2014)
2014-ல் இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்த ஹேல்ஸ், இங்கிலாந்துக்காக உலகக் கோப்பை சதம் அடித்த முதல் வீரரானார்.
அஹ்மத் ஷெஷாத் (பாகிஸ்தான் - 2014)
பாகிஸ்தான் அணியில் இருந்து இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் ஷெஷாத். 2014-ல் வங்கதேசத்துக்கு எதிராக அவர் சதம் (111*) அடித்தார்.
தமீம் இக்பால் (வங்கதேசம் - 2016)
2016 உலகக் கோப்பையில் ஓமனுக்கு எதிராக 103 ரன்கள் எடுத்த தமீம் இக்பால், வங்கதேசத்திற்காக இந்த மைல்கல்லை எட்டினார்.
ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து - 2021)
2021-ல் இலங்கைக்கு எதிராக 101 ரன்கள் எடுத்த பட்லர், டி20 வடிவத்தில் தனது ஆதிக்கத்தை உலகக் கோப்பையிலும் உறுதி செய்தார்.
ரிலீ ரோசோ (தென்னாப்பிரிக்கா - 2022)
2022-ல் வங்கதேசத்துக்கு எதிராக 109 ரன்கள் எடுத்த ரிலீ ரோசோ, டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரரானார்.
கிளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து - 2022)
இந்தப் பட்டியலில் கடைசி வீரர் கிளென் பிலிப்ஸ். 2022-ல் இலங்கைக்கு எதிராக பிலிப்ஸின் (104) அதிரடி ஆட்டம் வெளிப்பட்டது.

