MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 World Cup: இங்கிலாந்துக்கு மரண பயம் காட்டிய நேபாளம்.. கடைசி 6 பந்துகளில் தலைகீழாக மாறிய ஆட்டம்!

T20 World Cup: இங்கிலாந்துக்கு மரண பயம் காட்டிய நேபாளம்.. கடைசி 6 பந்துகளில் தலைகீழாக மாறிய ஆட்டம்!

டி20 உலகக்கோப்பையில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் சாம் கரண் சூப்பராக பந்துவீசியதால் நேபாளம் அணியின் வெற்றி கைகழுவிப் போனது.

2 Min read
Author : Rayar r
Published : Feb 08 2026, 08:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
நேபாளத்தை போராடி வீழ்த்தியது இங்கிலாந்து
Image Credit : Getty

நேபாளத்தை போராடி வீழ்த்தியது இங்கிலாந்து

டி20 உலகக்கோப்பை தொடரில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 8) நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி நேபாளம் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

 அதிரடியாக விளையாடிய ஜேக்கப் பெத்தல் 34 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹாரி புரூக் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் அடித்தார். 

22
வில் ஜாக்ஸ் அதிரடி
Image Credit : X/ICC

வில் ஜாக்ஸ் அதிரடி

கடைசி கட்டத்தில் வில் ஜாக்ஸ் 18 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார். நேபாளம் சார்பில் நந்தன் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஷேர் மல்லா, திபேந்திர சிங் ஐரி, சந்தீப் லமிச்சானே தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்பு 185 ரன்கள் இலக்கை துரத்திய நேபாளம், குஷால் புர்டெல் மற்றும் ஆசிஃப் ஷேக்கின் அதிரடியால் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 என சிறப்பாகத் தொடங்கியது. 

குஷால் புர்டெல் 17 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். இதனைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் பவுடல் மற்றும் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் சிக்சர் மழை

திபேந்திர சிங் ஐரி 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அப்போது நேபாளம் 125/3 என்ற நிலையில் இருந்தது. அடுத்த ஓவரிலேயே கேப்டன் ரோஹித் பவுடல் (34 பந்துகளில் 39 ரன்கள்) லியாம் டாசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால், நேபாளம் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

ஆனால் கடைசி கட்டத்தில் அதிரடியில் கலக்கிய லோகேஷ் பாமின் ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்க விட்டு நோபாள அணியை வெற்றி பக்கம் அழைத்து சென்றார்.

கடைசி 6 பந்துகளில் தலைகீழாக மாறிய ஆட்டம்

கடைசி ஓவரில் நேபாளம் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை வீசிய சாம் கரண் யார்க்கர் பந்துகளையும், லோ புல்டாஸ் பந்துகளையும் போட்டதால் லோகேஷ் பாமினால் அடிக்க முடியவில்லை. கடைசில் ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் நேபாளம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

கத்துக்குட்டியான நேபாளம் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு மரண பயம் காட்டியுள்ளது. இங்கிலாந்து தரப்பில் லியாம் டாவ்சன் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், லுக் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

Related Articles

Related image1
T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்.. சிக்சர் மன்னன் விலகல்.. பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்!
Related image2
T20 உலகக்கோப்பை: அதிக ரன்களை சேஸ் செய்து அசத்திய நியூசிலாந்து.. கிளென் பிலிப்ஸ் புதிய மைல்கல்!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 உலகக்கோப்பை: அதிக ரன்களை சேஸ் செய்து அசத்திய நியூசிலாந்து.. கிளென் பிலிப்ஸ் புதிய மைல்கல்!
Recommended image2
T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்.. சிக்சர் மன்னன் விலகல்.. பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்!
Recommended image3
பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! சூர்யாவின் அதிரடிக்கு கிடைத்த முதல் பரிசு! அமெரிக்காவை காலி செய்த சிராஜ் அண்ட் அர்ஷ்தீப் காம்போ!
Related Stories
Recommended image1
T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்.. சிக்சர் மன்னன் விலகல்.. பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்!
Recommended image2
T20 உலகக்கோப்பை: அதிக ரன்களை சேஸ் செய்து அசத்திய நியூசிலாந்து.. கிளென் பிலிப்ஸ் புதிய மைல்கல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved