- Home
- Sports
- Sports Cricket
- T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்.. சிக்சர் மன்னன் விலகல்.. பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்!
T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்.. சிக்சர் மன்னன் விலகல்.. பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்!
T20 World Cup 2026: T20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய அணி வெற்றி
T20 உலகக்கோப்பை (T20 World Cup) திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கி வருகிறது. இதில் நேற்று (பிப்ரவரி 7) தனது தொடக்க ஆட்டத்தை அமெரிக்காவுக்கு எதிராக ஆடிய இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது. மேஜிக்கல் இன்னிங்ஸ் ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 49 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது 2வது ஆட்டத்தை வரும் 12ம் தேதி (வியாழக்கிழமை) நமீபியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் படுமோசமாக விளையாடிய சஞ்சு சாம்சன் (Sanju Samson)அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அவர் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு அதிகம் உள்ளது.
அபிஷேக் சர்மா விளையாடுவதில் சிக்கல்
அதாவது இந்திய அணியின் அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா (Abhishek Sharma) அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 2வதாக இந்தியா பீல்டின் செய்தபோது அவர் கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி காரணமாக பீல்டிங் செய்ய வரவில்லை.
அபிஷேக் சர்மாவுக்கு காய்ச்சல் தீவிரமாக இல்லையென்றாலும் கத்துக்குட்டியான நமீபியாவுக்கு எதிராக அவரை விளையாட வைத்து பிசிசிஐ ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
வாஷிங்டன் சுந்தரும் பிளேயிங் லெவனில்
ஆகையால் அபிஷேக் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர காய்ச்சல் காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுகிறார். இதனால் முகமது சிராஜ் நீக்கபட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் காயத்தில் இருந்து மீண்ட ஆல்ரவுண்டர் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் பிளேயிங் லெவனில் ஆடுகிறார். கேப்டன் சூர்யகுமார் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய அணி பிளேயிங் லெவன்
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங்.

