மீண்டும் களம் காண்கிறார் ரெய்னா.. செம குஷியில் ரசிகர்கள்
First Published Dec 10, 2020, 6:38 PM IST
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததுடன், ஐபிஎல் 13வது சீசனிலும் ஆடிராத சுரேஷ் ரெய்னா, மீண்டும் களம் காணவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும் தோனியின் ஆஸ்தான வீரர் மற்றும் நண்பராகவும் திகழ்ந்த சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்லுக்கு முன், ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி தோனி ஓய்வறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தானும் ஓய்வறிவித்தார்.

இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களை குவித்துள்ள ரெய்னா, 18 டெஸ்ட் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் ரெய்னா.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?