ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லை – சூர்யகுமார் யாதவ்விற்கு பிறகு டி20 கேப்டன் யார்? சுரேஷ் ரெய்னா சொன்ன சீக்ரெட்
சுப்மன் கில்லின் கேப்டன்சி திறமை மற்றும் எதிர்கால இந்திய கேப்டன் பதவிக்கு அவரது தகுதி குறித்து சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார். ஐபிஎல் டிராபி வெற்றி, கில்லின் கேப்டன்சி திறனை மேலும் உயர்த்தும் என ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Hardik Pandya
ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவிட இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டனுக்கான தகுதி சுப்மன் கில்லிடம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், 2011 உலகக் கோப்பை வென்றவருமான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், அவருக்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இளம் இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
Hardik Pandya
இந்த நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கில், ஐபிஎல் டிராபி வென்றால் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார். சுப்மன் கில் ஒரு சிறந்த வீரர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். கில் துணை கேப்டன் என்றால் அவர் கேப்டனுக்காக தகுதி இருக்கிறது என்று யாரோ நினைக்கிறார்கள். ஆனால், அவர் ஐபிஎல் தொடரில் டிராபி வென்றால் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக இருப்பார். இவ்வளவு ஏன், அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.
Shubman Gill
கடந்த 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டில் வெளியேறிய கில் 2ஆவது இன்னிங்ஸில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 179ஆவது வெற்றியை பெற்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடினார். அதன் பிறகு பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று விளையாடவில்லை. ஒயிட் நிற பந்துகளில் முழு கவனமும் செலுத்தி விளையாடி வருகிறார். 2023 ஆம் ஆண்டுக்கான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபி இறுதிப் போட்டியில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாண்டியா இடம் பெறவில்லை.
Shubman Gill
எனினும், 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபி இறுதிப் போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் கில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. பணிச்சுமையின் காரணமாக, வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்படும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடன் இணைந்து இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒரு அங்கமாக இருக்கிறார்.
Shubman Gill
ஐபிஎல் 2025 தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் 2024 தொடரில் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 5ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்திருந்தது. கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.