ஒரு காட்டு காட்டிய ஷஷாங்க், அஷுதோஷ்: கதி கலங்கி போன ஹைதராபாத் – 2 ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற SRH!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 23ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
PBKS vs SRH, 23rd IPL 2024 Match, Mullanpur
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 23 ஆவது லீக் போட்டி முல்லன்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.
SRH, IPL 2024 Points Table
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை கஜிஸோ ரபாடா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் கேட்ச் ஆனார்.
IPL 2024, PBKS vs SRH 23rd Match
ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பஞ்சாப் வீரர்கள் ரெவியூ கேட்கவில்லை. அதன் பின்னர் டிவி ரீப்ளேயில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. எனினும், அவர் 21 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த எய்டன் மார்க்ரம் 2 பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Punjab Kings vs Sunrisers Hyderabad
அதிரடிக்கு பெயர் போன ஹென்ரிச் கிளாசென் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ராகுல் திரிபாதி 11 ரன்களில் வெளியேறினார். எனினும், கடைசி வரையில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 37 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் அரைசதம் ஆகும் மேலும், டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள முதல் அரைசதம் ஆகும்.
Sunrisers Hyderabad vs Punjab Kings, IPL 2024
அப்துல் சமாத் 25 ரன்கள் எடுக்க, ஷாபாஸ் அகமது 14 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த ஜெயதேவ் உனத்கட் கடைசி பந்தில் ஒரு சிக்ஸ் அடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
Sunrisers Hyderabad
பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரபாடா ஒரு விக்கெட் எடுத்தார்.
Punjab Kings
பின்னர் 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பேர்ஸ்டோவ் 3 ரன்களில் பேட் கம்மின்ஸ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிராப்சிம்ரன் சிங் 4 ரன்களில் வெளியேறினார்.
PBKS vs SRH, 23rd IPL Match
கேப்டன் தவான் 14 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். சாம் கரண் 2 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 29 ரன்களில் ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ராஸா 28, ஜித்தேஷ் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் கிங்ஸ் 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.
Nitish Reddy, Sunrisers Hyderabad
கடைசி 5 ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 78 ரன்கள் தேவை இருந்தது. கடைசியில் அஷுதோஷ் சர்மா மற்றும் ஷஷாங்க் சர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்தனர். கடைசி ஓவரை ஜெயதேவ் உனத்கட் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் அஷூதோஷ் சர்மா 6 சிக்ஸ் அடித்தார். அதனை தடுக்க முயன்ற நிதிஷ் ரெட்டி கேட்ச் பிடித்து கோட்டைவிட பந்து சிக்ஸருக்கு சென்றது.
Nitish Reddy, SRH
அடுத்த 2 பந்தையும் வைடாக வீசினார். 2 ஆவது பந்தையும் சிக்ஸருக்கு விரட்டினார். அப்துல் சமாத் பந்தை ஜம்ப் பண்ணி கேட்ச் பிடிக்க முயற்சித்தார். எனினும், பந்து சிக்ஸருக்கு சென்றது. அடுத்த 2 பந்துகளில் 2, 2 என்று 4 ரன்கள் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தில் கொடுக்கப்பட்ட கேட்ச் வாய்ப்பை ராகுல் திரிபாதி கோட்டைவிட்டார். அந்த பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் பஞ்சாப் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.
Shashank Singh, PBKS
அந்த பந்தில் நோபால் போட்டிருந்தால் எப்படியும் பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும். எனினும் அந்த பந்தில் ஷஷாங்க் சிங் சிக்ஸர் அடித்தார். கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 2 ரன்களில் தோல்வியை தழுவியது.
PBKS vs SRH, 23rd IPL Match
இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 3 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.