கோடி கோடியாய் சம்பாதித்தாலும் இதை கூட செய்ய மாட்றாங்க – தென் ஆப்பிரிக்காவை விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியானது டாஸ் கூட போட முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
South Africa vs India First T20I
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடக்க இருந்தது.
Rain at Durban
இரவு 7.30 மணிக்கு நடக்க இருந்த போட்டிக்கு 7 மணிக்கு டாஸ் போட இருந்தது. ஆனால், டர்பனில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. எப்போது மழை விடும், போட்டி நடக்கும் என்று காத்திருந்து காத்திருந்து ரசிகர்கள் தான் ஏமாற்றம் அடைந்தனர்.
South Africa T20 Match
இறுதியாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் தான், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான், சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது: தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மைதானத்தில் மழை பெய்த போது பிட்ச் மற்றும் 30 யார்டு சர்க்கிள் மட்டுமே தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது.
SA vs IND T20I Called Off Rain
அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் சங்கங்கள் ஒவ்வொன்றும் மழை பெய்தால் மைதானத்தை முழுமையாக மூடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும். இவ்வளவு ஏன், கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது மைதானத்தை முழுமையாக மூடாததன் காரணமாக பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக புள்ளிகள் இழக்கும் நிலை தான் ஏற்பட்டது.
Durban Rain
இதில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று தான். இந்தியாவில் கொல்கத்தா மைதானம் மழை பெய்தால் மைதானம் முழுவதுமாக தார்பாய் கொண்டு மூடப்படும். கொல்கத்தாவில் டெஸ்ட் போட்டி நடந்த போது, மழை குறுக்கீடு ஏற்பட்டது. இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டது.
South Africa vs India T20I Durban
இதையடுத்து, மழை பெய்தால் மைதானத்தை முழுமையாக மூடி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு ஒரு முறை கூட தவறுகள் நடக்கவில்லை. இவ்வளவு ஏன், ஆசிய கோப்பையின் போது இலங்கை கிரிக்கெட் வாரியமும் மழை பெய்த போது மைதானம் முழுவதையும் மூடி சிறப்பாக செயல்பட்டது என்று கூறியுள்ளார்.