பிரதாப்பின் சுழலில் சின்னாபின்னமான நியூசி: மோசமான சாதனைப்பட்டியலில் இடம் பிடித்த சோகம்
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 602 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து அணி பிரபாத் ஜெயசூர்யா பந்துவீச்சில் சரிந்தது. இது இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர் ஆகும்.
Kane Williamson
இலங்கை, நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 602 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து அணியை 88 ரன்களுக்கு சுருட்டி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யாவின் சூழலில் சிக்கி சின்னாபின்னமான நியூசிலாந்து அணி வரலாற்றில் மூன்றாவது பெரிய ஸ்கோரை பாலோஆனாகப் பெற்று மோசமான சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
SL Vs NZ
இலங்கை 514 ரன்கள் முன்னிலை பெற்று பாலோ-ஆன் கேட்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாலோ-ஆன் கேட்கப்பட்ட போட்டிகளில், மூன்றாவது பெரிய முதல் இன்னிங்ஸ் முன்னிலை இதுவாகும். மேலும், டெஸ்டுகளில் நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய இன்னிங்ஸ் பற்றாக்குறை இதுவாகும். ஒட்டுமொத்தமாக, எந்தவொரு அணியின் ஐந்தாவது பெரிய இன்னிங்ஸ் பற்றாக்குறை இதுவாகும்.
காலேவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிச்சில் இலங்கை அணி அபாரமான பேட்டிங் செய்தது. தினேஷ் சண்டிமல், கமிந்து மெண்டிஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சதம் அடித்தனர். இதற்கிடையில் திமுத் கருணாரத்னே (46), ஏஞ்சலோ மேத்யூஸ் (88) மற்றும் கேப்டன் தனஞ்சய டி சில்வா (44) ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுத்தனர்.
Prabath Jayasuriya
நியூசிலாந்து அணி 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் இரண்டு தொடக்க வீரர்களையும் இழந்தது. அசிதா பெர்னாண்டோ மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் முறையே டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வேயின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 ஆம் நாள் ஆட்டத்தில், கேன் வில்லியம்சன், டேரி மிட்செல், டாம் பிளண்டெல், கிளென் பிலிப்ஸ் மற்றும் சவுத்தி ஆகியோரின் விக்கெட்டுகளை ஜெயசூர்யா வீழ்த்தினார். இறுதியில் அவர் 42 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிஷான் பீரிஸ் 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Prabath Jayasuriya
நியூசிலாந்து ஏற்கனவே முதல் டெஸ்டில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலையில் உள்ளது. 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை மற்றும் நியூசிலாந்து முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. தொடரின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே ஜூன் 2025 இல் லார்ட்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
Kamindu Mendis
இலங்கையில் இரண்டாவது டெஸ்டுக்குப் பிறகு, நியூசிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காக இந்தியாவுக்குச் செல்லும். அதே நேரத்தில் இலங்கை அணி அடுத்த ரெட் பால் தொடரில் நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறது.