- Home
- Sports
- Sports Cricket
- சுப்மன் கில் காயம்.. 5வது T20 போட்டியில் விலகல்.. அதிரடி மன்னன் சேர்ப்பு.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
சுப்மன் கில் காயம்.. 5வது T20 போட்டியில் விலகல்.. அதிரடி மன்னன் சேர்ப்பு.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND vs SA 5th T20I: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா 5வது டி20
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. முதல் மற்றும் 3வது போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்தியா 2 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், நாளை 5வது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.
சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம்
கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது துணை கேப்டன் சுப்மன் கில்லுக்கு பதிலாக அதிரடி மன்னன் சஞ்சு சாம்சன் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. 4வது டி20 போட்டிக்கு முன்னதாக வலைபயிற்சியில் ஈடுபட்ட சுப்மன் கில் காயம் அடைந்தார். இதனால் அவர் 4வது போட்டியில் இடம்பெற மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் கடைசியில் பனிமூட்டம் காரணமாக அந்த போட்டியே ரத்தானது.
சுப்மன் கில் காயம்
நாளை 5வது டி20 போட்டி நடைபெற உள்ள குஜராத் நரேந்திர மோடி மைதானத்துக்கு இந்திய அணியினருடன் சுப்மன் கில்லும் சென்றுள்ளார். காயம் குணமடைந்த போதிலும் அடுத்து டி20 உலகக்கோப்பை வர உள்ளதால் கில் விஷயத்தில் பிசிசிஐ ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சுப்மன் கில்லை வெளியே வைத்து விட்டு சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்க தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சுப்மன் கில் பேட்டிங் படுமோசம்
கடந்த 16 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அடிக்காத சுப்மன் கில் இந்த தொடரிலும் கடுமையாக சொதப்பினார். முதல் போட்டியில் 4 ரன்னில் அவுட்டான அவர் 2வது போட்டியில் டக் அவுட் ஆனார். 3வது போட்டியில் தடுமாற்றத்துடன் 28 ரன்கள் அடித்தார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
சுப்மன் கில்லை தவிர ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பெற வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஹர்சித் ராணா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது டி20 போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

