- Home
- Sports
- Sports Cricket
- IND vs AUS Final: சச்சினும் 4 ரன்னு, கில்லும் 4 ரன்னு; 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நினைவுபடுத்திய கில்!
IND vs AUS Final: சச்சினும் 4 ரன்னு, கில்லும் 4 ரன்னு; 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நினைவுபடுத்திய கில்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தது, 2003 உலகக் கோப்பையில் சச்சின் 4 ரன்களில் வெளியேறியதை நினைவுபடுத்தியுள்ளது.

சச்சின் 4 ரன்கள்
இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
சுப்மன் கில் அண்ட் சச்சின் 4 ரன்கள்: https://x.com/itz_chillax/status/1726164469703909487?s=20
சுப்மன் கில் 4 ரன்கள்
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது. இதே போன்று ஆஸ்திரேலியாவும் விளையாடிய 10 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது.
2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி
ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கில் 3ஆவது ஓவரின் முதல் பந்தில் தான் பேட்டிங்கே செய்தார். அந்த பந்திலேயே அவர் ஆட்டமிழக்க வேண்டியது.
2023 கிரிக்கெட் உலகக் கோப்பை
எனினும், அதிலிருந்து தப்பித்த அவர், ஸ்டார்க் வீசிய 5ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் கில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் கொடுத்த கேட்சை ஆடம் ஜம்பா பிடித்தார். கில் 7 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
கில் மற்றும் சச்சின் 4 ரன்கள்
இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்படி சச்சின் செய்ததை, கில்லும் செய்து வரும் நிலையில், சாராவிற்காக தான் சுப்மன் கில் இவ்வாறு செய்ததாக ரசிகர்கள் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.