India vs Australia 4th T20I: மீண்டும் வேலையை காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்; பொறுப்பில்லாமல் விளையாடிய துணை கேப்டன்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் தனது வேலையை காட்ட தொடங்கினார்.
Shreyas Iyer
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி தற்போது ராய்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் 3 டி20 போட்டிகளில் இந்தியா 2 போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
Shreyas Iyer
ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், கைல் ரிச்சர்ட்சன், நாதன் எல்லிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மோட், கிறிஸ் க்ரீன், மேத்யூ ஷார்ட் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.
Shreyas Iyer
இதே போன்று இந்திய அணியிலும் இஷான் கிஷான், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக முகேஷ் குமார், ஷ்ரேயாஸ் ஐயர், ஜித்தேஷ் சர்மா, தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
Shreyas Iyer - India vs Australia 4th T20
இன்றைய போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் களமிறங்கிய் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்து விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டு 8 ரன்களில் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்று ஆலோசித்த நிலையில், அதன் பிறகு அடுத்தடுத்து சதம் அடித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Shreyas Iyer
உலகக் கோப்பை தொடரில் 11 போட்டிகளில் 10 இன்னிங்ஸ் விளையாடி 526 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 128 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது அதே நிலையை தான் டி20 போட்டியிலும் தொடங்கியுள்ளார். பொறுமையாக ஆரம்பித்து அதிரடி காட்ட வேண்டி எடுத்த உடனேயே அடித்து விளையாட ஆசைப்பட்டு 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.