- Home
- Sports
- Sports Cricket
- இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு! போராட்டத்தில் குதிக்கும் சிவசேனா! வலுக்கும் ஆதரவு!
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு! போராட்டத்தில் குதிக்கும் சிவசேனா! வலுக்கும் ஆதரவு!
ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.

Asia Cup 2025: India vs Pakistan
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியை போல் இந்த முறையும் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே வேளையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் கொதிப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்தியாவின் எல்லையோரங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் அந்த நாட்டுக்கு எதிராக பெரும்பாலான இந்தியர்கள் கொதிப்பில் உள்ளனர்.
பாகிஸ்தானுடன் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், அந்த நாட்டுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடுவது ஏன்? என பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா போராட்டத்தில் குதித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக சிவசேனா போராட்டம்
அதாவது இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளான 14ம் தேதி 'எனது சிந்தூர், எனது நாடு' என்ற பெயரில் சிவசேனா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், ''ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட வைத்து பிசிசிஐயும், பாஜகவும் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது. இரத்தமும் கிரிக்கெட்டும் எப்படி ஒன்றாக செல்ல முடியும்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இரத்தமும் கிரிக்கெட்டும் எப்படி ஒன்றாக செல்ல முடியும்?
இதேபோல் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ''பஹல்காமில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பிறகும், அவர்களின் குடும்பங்களின் வலியை நாம் இன்னும் காண்கிறோம். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் முடிவடையவில்லை என்று பாஜக தலைவர்கள் கூறினர்.
பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் பாகிஸ்தானின் முதுகை உடைப்போம் என்று கூறினார்கள். இரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே இப்போது இரத்தமும் கிரிக்கெட்டும் எப்படி ஒன்றாக செல்ல முடியும்?
அமித்ஷா தேச பக்தியை கற்பிக்கலாமா?
அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா கிரிக்கெட்டின் உச்ச தலைவராக உள்ளார். ஆனால் அவர் இந்த போட்டியை நடத்துவதில் முன்னணியில் உள்ளார். ஆனால் அமித் ஷா எங்களுக்கு தேசபக்தியைக் கற்பிக்கிறார்.
பொதுமக்களின் உணர்வுக்கு எதிரான இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை சிவசேனா கட்சி எதிர்க்கும். இந்த போராட்டத்தில் கலந்து பெண்கள் பிரதமர் மோடிக்கு குங்குமம் அனுப்புவார்கள்'' என்றார்.