காதலியை கரம் பிடிக்கும் ஷிகர் தவான்.. 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?
ஷிகர் தவானுக்கு இது இரண்டாவது திருமணமாகும். இவருக்கும் ஆயிஷா முகர்ஜி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் முடிந்தது. பின்பு 2023ல் மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

ஷிகர் தவான் நிச்சயதார்த்தம்
இந்திய முன்னாள் வீரர் ஷிகர் தவான் தனது காதலில் சோஃபி ஷைனை நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக வலைதளப் பதிவு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஷிகர் தவான், ரோஜாக்களால் ஆன இதய வடிவ பூங்கொத்தின் முன் தனது கையின் மீது காதலியின் கையை வைத்திருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார்.
விரைவில் திருமணம்
''ஒன்றாகச் சிரிப்பதில் இருந்து ஒன்றாகக் கனவு காண்பது வரை. இந்த அன்புக்கும் எங்கள் நிச்சயதார்த்தத்திற்கும் உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளோம்'' என்று ஷிகன் தவான் சமூக வலைத்தள பதிவில் கூறியுள்ளார். ஷிகர் தவான், சோஃபி ஷைன் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
2வது திருமணம்
ஷிகர் தவானுக்கு இது இரண்டாவது திருமணமாகும். இவருக்கும் ஆயிஷா முகர்ஜி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தவானும், ஆயிஷா முகர்ஜியும் கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2023ம் ஆண்டு பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து தான் ஷிகர் தவானுக்கும், சோஃபி ஷைனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காதல் மலர்ந்தது
தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகிய நிலையில், பின்பு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் போது துபாயில் தவானும் ஷைனும் ஒன்றாகக் காணப்பட்டனர். ஊடக மாநாட்டிலும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். அப்போது தவான் சோஃபி ஷைன் உடனான உறவு குறித்து சூசகமாகத் தெரிவித்து இருந்தார்.
யார் இந்த சோஃபி ஷைன்?
இப்போது இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு உலகுக்கு வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஷிகர் தவானில் வருங்கால மனைவி சோஃபி ஷைன் அயர்லாந்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவை சேர்ந்த நிதிச்சேலை நிறுவனத்தில் இரண்டாம் துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். துபாயில் உள்ள கிளையில் அவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

