Sanju Samson: மக்கள் தன்னை அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட் வீரர் என்று கூப்பிடுறாங்க – சஞ்சு சாம்சன் வேதனை!
இந்திய அணியில் இடம் கிடைக்காத வேதனையில் இருக்கும் சஞ்சு சாம்சன், மக்கள் தன்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
Sanju Samson Rajasthan Royals Captain
கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் சஞ்சு சாம்சன். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதே போன்று 2021 ஜூலை 23 ஆம் தேதி நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
சஞ்சு சாம்சன்
ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே இதுவரையில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக இந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் இடம் பெற்றார். அதன் பிறகு ஆசிய கோப்பை 2023, உலகக் கோப்பை 2023, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் என்று எதிலும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
Sanju Samson - IPL 2024
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இந்த நிலையில் தான் இந்திய அணியில் இடம் பெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படு தன்னை மக்கள் அதிர்ஷ்டமில்லாதவன் என்று அழைக்கிறார்கள் என்று யூடியூப் சேனல் ஒன்றில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Sanju Samson - Rajasthan Royals
மேலும், ஆனால், தான் இப்போது அடைந்த இடத்திற்கு நான் நினைத்ததை விட அதிகம் என்று சாம்சன் கூறியிருக்கிறார். மேலும், ரோகித் சர்மா மட்டுமே தன்னை ஐபிஎல் தொடர்களில் பாராட்டியிருப்பதாக கூறியுள்ளார்.