ஒரே போட்டியில் இத்தன சாதனையா? வேட்டை ராஜா சஞ்சு சாம்சனின் புதிய அவதாரம் – அலறிய தென் ஆப்பிரிக்கா!
Sanju Samson Breaks Many Records in IND vs SA 1st T20 Cricket : தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.
Sanju Samson, India vs South Africa 1st T20 Cricket
Sanju Samson Breaks Many Records in IND vs SA 1st T20 Cricket: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இருதரப்பு டி20 தொடரில் விளையாடுகின்றன. தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது டர்பன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சாம்சன் எடுத்த உடனேயே அதிரடி காட்ட தொடங்கினார். மார்க்ரம் வீசிய போட்டியின் 2ஆவது ஓவரில் சாம்சன் பவுண்டரி அடித்து தனது பவுண்டரி கணக்கை தொடங்கினார். அதன் பிறகு கேசவ் மகராஜ் வீசிய 3ஆவது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், அபிஷேக் சர்மா 7 ரன்களில் நடையை கட்டினார்.
Sanju Samson, IND vs SA 1st T20 Cricket
கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி வழக்கம் போன்று தனது அதிரடி வேட்டையை தொடங்கினார். மைதானத்தின் 4 பக்கமும் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டார். சாம்சன் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 27 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் அரைசதம் கடந்தார். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்ஸர் வீசம் சாம்சன் அதிரடி காட்டினார்.
அடுத்தடுத்த டி20 போட்டிகளில் சதம்:
ஆனால், சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 99 ரன்கள் எடுத்திருந்த போது போட்டியின் 14.1ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசி சாதனை படைத்தார். அடுத்தடுத்த டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். இதற்கு முன்னதாக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய குஸ்டவ் மெக்கான், ரிலே ரோஸோவ், பில் சால்ட் ஆகியோரது வரிசையில் சாம்சன் இடம் பெற்றார்.
Sanju Samson Breaks Records
ஸ்பின்னருக்கு எதிராக அதிக ரன்கள்:
இந்தப் போட்டியில் 46 பந்துகளில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 107 ரன்கள் எடுத்த சாம்சன் ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டும் 27 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். மேலும், யுவராஜ் சிங் சாதனையையும் முறியடித்தார்.
ஸ்பின்னருக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர்கள்:
65(28) அபிஷேக் சர்மா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024
64(23) சஞ்சு சாம்சன் vs வங்கதேசம், ஹைதராபாத், 2024
58(27) சஞ்சு சாம்சன் vs தென் ஆப்பிரிக்கா, சர்பன், 2024
57(24) யுவராஜ் சிங் vs பாகிஸ்தான், அகமதாபாத் 2012
Sanju Samson Breaks Many Records
ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்:
ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியில் சாம்சன் 107 ரன்கள் எடுத்து டேவிட் மில்லரது 106 ரன்கள் சாதனையை முறியடித்தார். அவர், 2022ல் கவுகாத்தியில் இந்தியாவிற்கு எதிராக 106 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது சாம்சன் அந்த சாதனையை முறியடித்து 107 ரன்கள் குவித்தார்.
India vs South Africa 1st T20 Cricket
10 சிக்ஸர்கள் – ரோகித் சர்மா வரிசையில் இடம் பெற்ற சாம்சன்:
ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் சாம்சன் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உள்பட 107 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு இந்திய வீரர் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக 10 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். அவருக்கு பிறகு சஞ்சு சாம்சன் தான் 10 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். அவருக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் 9 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். கேஎல் ராகுல் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
Sanju Samson, SA vs IND 1st T20 Cricket
15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி அடுத்த 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. திலக் வர்மா தன் பங்கிற்கு 18 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 2, ரிங்கு சிங் 11, அக்ஷர் படேல் 7, ரவி பிஷ்னாய் 1, அர்ஷ்தீப் சிங் 5 ரன்கள் எடுத்தனர்.