ஒருநாள் கிரிக்கெட்டுக்கு பாண்டியா, ஜடேஜாலாம் சரிப்பட்டு வரமாட்டானுங்க - ச(ர்ச்சை)ஞ்சய் மஞ்சரேக்கர்

First Published Nov 28, 2020, 8:47 PM IST

ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோரெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டுவரமாட்டார்கள் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்துவருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதற்கு பெயர்போன சஞ்சய் மஞ்சரேக்கர், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையின்போது ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

அதன்பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ஆடிய பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது, சக வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவை மட்டம்தட்டி பேசி மறுபடியும் சர்ச்சையில் சிக்கினார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கிவந்த சஞ்சய் மஞ்சரேக்கரை வர்ணனையாளர் குழுவிலிருந்து பிசிசிஐ நீக்கியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் தொடரில் மீண்டும் வர்ணனையாளராக சேர்க்கப்பட்ட சஞ்சய் மஞ்சரேக்கர், தற்போது அந்த தொடரில் வர்ணனை செய்துவருகிறார்.

இந்நிலையில், ஜடேஜா குறித்த தனது பழைய கருத்து தி இந்துவிற்கு பேசியபோது தெரிவித்த சஞ்சய் மஞ்சரேக்கர், ஜடேஜாவுடன் எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் அவர் மாதிரியான கிரிக்கெட் வீரர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஹர்திக் பாண்டியாவையும் நான் ஒருநாள் கிரிக்கெட் அணியில் எடுக்கமாட்டேன். அவர்கள் எல்லாம் அணியில் இருக்கும் மாயைகள். ஆனால் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த வீரர் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?