#AUSvsIND டி20யிலும் தவானுடன் அவரையே தொடக்க வீரராக இறக்குங்க; ராகுல் வேண்டாம்..! அடம்பிடிக்கு முன்னாள் கோச்
First Published Dec 6, 2020, 1:58 PM IST
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்க வேண்டும் என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ரோஹித் சர்மா ஆடாததால் ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானுடன் மயன்க் அகர்வால் தொடக்க வீரர்களாக இறங்கிய நிலையில், டி20 போட்டியில் தவானுடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக இறங்கினார்.

ஆனால் தவானுடன் டி20 போட்டிகளிலும் மயன்க் அகர்வாலையே தொடக்க வீரராக இறக்கிவிட்டு, கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?