SA vs IND:ஒரே கேட்ச் தான், டோட்டல் மேட்சும் காலி: இம்பேக்ட் பீல்டர் ஆஃப் தி சீரிஸ் விருது வென்ற சாய் சுதர்சன்!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக கேட்ச் பிடித்த சாய் சுதர்சனுக்கு இம்பேக்ட் பீல்டர் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
SA vs IND ODI
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்படவே, 2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது. சாய் சுதர்சனுக்கு இம்பேக்ட் பீல்டர் ஆஃப் தி சீரிஸ் விருது!
Tilak Varma
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறா வேண்டியது. மழையின் காரணமாக டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. கடைசியாக 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-1 என்று தொடரை சமன் செய்தது.
Arshdeep Singh
டி20 போட்டியைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்தது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே, 2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-1 என்று சமன் செய்திருந்தது. இந்த நிலையில் தான் தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
Arshdeep Singh
இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணிக்கு திலக் வர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று தனது 16ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் தனது முதல் சதத்தை பதிவு செய்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ரிங்கு சிங் 38 ரன்கள் எடுத்துக் கொடுக்க இந்தியா 296 ரன்கள் குவித்தது.
South Africa vs India ODI Series
பின்னர், கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியில், டோனி டி ஜோர்ஸி மட்டுமே அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்த போதிலும் சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
Sanju Samson
பவுலிங்கைப் பொறுத்த வரையில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டர் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதற்கு முன்னதாக கடண்ட 2017/28 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரை 5-1 என்று இந்தியா கைப்பற்றியிருந்தது.
Tilak Varma
கடந்த 2021/2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்திருந்த போது இந்திய அணி விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தான் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
Sanju Samson
இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு வழக்கம் போன்று டிரெஸிங் ரூமில் வீரர்களுக்கு விருது கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில், ஆட்டநாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனுக்கும், தொடர் நாயகன் விருது வென்ற அர்ஷ்தீப் சிங்கிற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Sanju Samson, Tilak Varma
இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பரான கேஎல் ராகுல் 4 கேட்ச் பிடித்தார். சாய் சுதர்ஷன் ஒரு கேட்ச் டைவ் அடித்து பிடித்தார். இறுதியாக சிறந்த பீல்டருக்கான இம்பேக்ட் பீல்டர் விருது சாய் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.
India vs South Africa 3rd ODI
கேஎல் ராகுல் தனக்கு வழங்கப்பட இருந்த விருதை சாய் சுதர்சனுக்கு வழங்குமாறு கூறியதாக பீல்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார். முதல் 2 ஒருநாள் போட்டிகளில் சாய் சுதர்சன், 55 (நாட் அவுட்), 62 ரன்கள் சேர்த்தார். கடைசி போட்டியில் 10 ரன்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.