#AUSvsIND சிங்கம் மாதிரி இருந்த ஆஸி., அணி சீரழிந்ததற்கு இதுதான் காரணம்..! மாஸ்டர் பிளாஸ்டர் அதிரடி
First Published Dec 31, 2020, 2:24 PM IST
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், அணியில் வீரர்களுக்கான நிரந்தர இடம் இல்லாததுதான் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், இனிமேல் இந்திய அணி இந்த தொடரில் கம்பேக் கொடுக்காது; அதுவும் கோலி இல்லாத இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று மார்க் வாக், மைக்கேல் வான் ஆகிய முன்னாள் வீரர்கள் கருதினர்.

ஆனால் 2வது டெஸ்ட்டில் ரஹானே தலைமையிலான இந்திய அணி, ஆஸி.,யின் பேட்டிங் ஆர்டரை அசால்ட்டா அடித்து காலி செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் 195 ரன்கள் அடித்த ஆஸி., அணி, 2வது இன்னிங்ஸிலும் 200 ரன்களுக்கு சுருண்டது. ஆஸி., அணியின் பவுலிங் சிறப்பாகவுள்ள நிலையில், பேட்டிங் தான் சொதப்பலாக உள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?