சச்சின் பக்கத்தில் உட்காரவே வெட்கப்பட்ட தோனி – தனக்கு வந்த கேப்டன் வாய்ப்பை தோனிக்கு கொடுத்த மாஸ்டர் பிளாஸ்டர்
Sachin Tendulkar and MS Dhoni: முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையில் சச்சின் டெண்டுல்கர் 6 ஆண்டுகள் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருவரும் இணைந்து விளையாடிய நிலையில் ஐபிஎல் தொடரில் இருவரும் இணைந்து விளையாடவில்லை.
Sachin Tendulkar and MS Dhoni
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி வெற்றியின் உச்சத்தை அடைந்தார். 3 விதமான ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்து புதிய சகாப்தம் படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபிகளை வென்று கொடுத்த ஒரேயொரு கேப்டன் என்ற சாதனையை எம்.எஸ்.தோனி படைத்தார்.
2007 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் முக்கிய பங்கு வகித்தார். 2007 ஆம் ஆண்டு சச்சினுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
ஆனால், சச்சின் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றதோடு, தோனியின் பெயரை பரிந்துரை செய்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஐசிசி டிராபியையும் தோனி வென்று கொடுத்தார். 2009 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியானது டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
MS Dhoni and Sachin Tendulkar
2011 ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபியை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். இதன் மூலமாக சச்சின் டெண்டுல்கரின் 22 ஆண்டுகால கனவு தோனியின் மூலமாக நிறைவேறியது. அந்த டிராபி சச்சினுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. சச்சின் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்தினார். அவர் விளையாடுவதைப் பார்த்து வளர்ந்த வீரர்களில் சச்சினும் ஒருவர். ஆனால் ஒரு காலத்தில் சச்சினுடன் நேரம் செலவிடுவதை தோனி விரும்பவில்லை. அவருடனான சந்திப்பை தவிர்த்து வந்தார்.
sachin and dhoni
இது குறித்து ஜியோ இன்சைடரிடம் பேசிய சச்சின் கூறியிருப்பதாவது: கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் தோனி அதிகளவில் வெட்கப்பட்டார். அதோடு தனது இருக்கையை மாற்றிக் கொண்டார். நான் வங்கதேசத்தில் அவரை சந்தித்தேன். ஒரு போட்டியில் அவர் கடைசியில் ஓரிரு ஷாட்டுகளை அடித்தார். அவர் பதை அடிக்கும் போது பேட்டிலிருந்து வந்த சத்தம் என்னை வியக்க வைத்தது. இதையடுத்து நான் சௌரவ் கங்குலியிடம் கூறினேன் என்றார்.
இது போன்று பெரிய பெரிய ஹிட்டர்களுக்கு இந்த சிறப்பு உள்ளது. அது தோனிக்கும் இருந்தது. அதைத் தான் நான் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பார்த்தேன். விமானத்தில் பயணிக்கும் போது அவரது சீட்டும், என்னுடைய சீட்டும் அருகருகில் தான் இருக்கும். ஆனால், தோனி அதனை வேறு சில வீரர்களுடன் மாற்றிக் கொள்வார். எனது அருகில் அவர் உட்கார மாட்டார் என்றார்.
Dhoni and Sachin
தோனியின் கேப்டன்ஸியின் கீழ் சச்சின் டெண்டுல்கர் 6 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார். இதையடுத்து நவம்பர் 2023ல் சச்சின் தனது கடைசி போட்டியில் தோனியின் தலைமையின் கீழ் வான்கடே மைதானத்தில் விளையாடினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருவரும் இணைந்து விளையாடிய நிலையில் ஐபிஎல் தொடரில் இருவரும் இணைந்து விளையாடவில்லை. 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான் சிஎஸ்கே மற்றும் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில், சிஎஸ்கே வெற்றி பெற்று டிராபி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.