Test Cricket: சச்சின், கோலியால் கூட சாதிக்க முடியவில்லை: டெஸ்டில் சதம், இரட்டை சதம் அடித்த ஜாம்பவான் யார்?
Team India: டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம், சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் உலகில் 8 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவர் இந்திய வீரர். ஆனால், அது ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரும் அல்ல, ரன் மிஷன் என்று சொல்லக் கூடிய விராட் கோலி அல்ல. ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணனும் இல்லை. அப்போ யார் தெரியுமா?
Sunil Gavaskar
Test Cricket Records-India : உலக கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சாதித்து வருகின்றனர். அவற்றில் அதிக சதங்கள், அதிக ரன்கள், அதிக போட்டிகள், இரட்டை சதங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இதில் உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர்.
இருப்பினும், உலகில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த சாதனை இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரில் உள்ளது. டெண்டுல்கர் தனது வாழ்க்கையில் 100 சதங்களை விளாசியுள்ளார். டெஸ்டில் 51 சதங்களை அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, 49 சதங்களை அடித்துள்ளார். டெஸ்டில் சதம் அடிப்பது சாதாரணம்தான்..
Sachin Tendulkar - Sunil Gavaskar
ஒரே போட்டியில் சதம், இரட்டை சதம்
டெஸ்ட் போட்டியில் சதங்கள் அடிப்பது என்பது சர்வ சாதாரணம். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் போன்று அல்லாமல் எவ்வளவு நேரம் களத்தில் நின்று ரன்கள் சேர்க்கிறோம் என்பது தான் முக்கியம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏராளமான ஜாம்பவான்கள் சதம் அடித்துள்ளனர்.
ஆனால் ஒரே போட்டியில் சதம், இரட்டை சதம் அடித்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். அவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், அது நடந்தது. மிகவும் அரிதான இந்த சாதனையை ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம், சதம் அடித்த பெருமை உலகில் 8 பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். இதில் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் இருக்கிறார். ஆனால், நீங்கள் நினைப்பது போல் சச்சின் டெண்டுல்கர் அல்லது விராட் கோலி இந்த சாதனையை படைக்கவில்லை.
அவர்களைப் போன்று டெஸ்டில் அசத்திய தி கிரேட் வால் ஆஃப் இந்தியன் கிரிக்கெட் ராகுல் டிராவிட் அல்ல. டெஸ்டில் கங்காருகளை கதிகலங்க வைத்த விவிஎஸ் லட்சுமணன் என்று நினைத்தாலும் அவரும் இல்லை.
Sunil Gavaskar
ஒரே டெஸ்ட் போட்டியில் சதம், இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் யார்?
ஒரே டெஸ்ட் போட்டியில் சதம், இரட்டை சதம் அடித்த ஒரே இந்திய வீரர் சுனில் கவாஸ்கர். 10,000 டெஸ்ட் ரன்களை எட்டிய இந்த ஜாம்பவான் 1971 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சுனில் கவாஸ்கர் 124 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 220 ரன்களும் எடுத்தார். அந்த நேரத்தில், கவாஸ்கர் இந்த அற்புதத்தை செய்த உலகின் 2ஆவது பேட்ஸ்மேன் ஆனார்.
கவாஸ்கரின் சாதனைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1969 இல், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டக் வால்டர்ஸ் கூட ஒரே போட்டியில் சதம், இரட்டை சதம் அடித்தார். அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 242 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 103 ரன்களும் எடுத்தார். இதன் மூலம் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
Sunil Gavaskar Test Records
தற்போது விளையாடி வருபவர்களில் ஒருவர் மட்டுமே
டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம், சதம் அடித்த தற்போது கிரிக்கெட் விளையாடி வருபவர்களில் ஒருவர் மட்டுமே உள்ளனர். அவர்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுசேன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த டெஸ்ட் சிறப்பு வாய்ந்த பேட்ஸ்மேன் 2022ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம், சதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 204 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 104 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர்களுடன், லாரன்ஸ் ரோவ் (நியூசிலாந்துக்கு எதிராக - 214, 100*), கிரெக் சேப்பல் (நியூசிலாந்துக்கு எதிராக - 247*, 133), கிரஹாம் கூச் (இந்தியாவுக்கு எதிராக - 333, 123), பிரையன் லாரா (இலங்கைக்கு எதிராக - 221, 130), குமார் சங்கக்காரா (வங்கதேசத்திற்கு எதிராக - 319, 105) ஆகியோரும் ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம், சதம் அடித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
Sunil Gavaskar Test Cricket Records
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். 125 போட்டிகள் கொண்ட டெஸ்ட் வாழ்க்கையில் 10,122 ரன்கள் எடுத்தார். இதில் 34 சதங்களும், 45 அரை சதங்களும் அடங்கும். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சுனில் கவாஸ்கர் பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
இதுவரை அவரது சாதனைகளை முறியடிக்க முடியாதவற்றில் இந்திய கேப்டனாக டெஸ்ட் தொடரில் அதிகபட்சமாக 732 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக வேகமாக 5000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.