இம்பேக்ட் பிளேயர் ரூல் பற்றி தாறுமாறாக பேசிய அஸ்வின்: அப்படி என்ன தான் ஸ்பெஷல்?
ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார், இது ஆல்-ரவுண்டர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்ற கருத்துக்களை மறுத்துள்ளார். இந்த விதிமுறை விளையாட்டை மிகவும் நியாயமானதாக்குகிறது மற்றும் துருவ் ஜூரேல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
Ravichandran Ashwin
IPL 2025-Ravichandran Ashwin: இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் அமலில் உள்ள இம்பேக்ட் பிளேயர் விதிமுறை குறித்து கூறிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விதிமுறை குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் ஏற்கனவே கலவையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இருப்பினும், இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கு அஸ்வின் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
Ashwin
ஐபிஎல் 2023 சீசனில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு பேட்டிங் அணிகள் அதிக ரன்கள் குவித்ததால் இந்த விதிமுறை விவாதப் பொருளானது. ரோகித் சர்மா, க்ரிஸ் ஸ்ரீகாந்த் போன்ற தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள் இந்த விதிமுறை ஆல்-ரவுண்டர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
Impact Player
முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்தின் யூடியூப் நிகழ்ச்சியான 'சீக்கி சீக்கா'வில் பேசிய அஸ்வின், "இம்பாக்ட் பிளேயர் விதிமுறை அவ்வளவு மோசமானது என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் இது மேலும் சில வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதற்கு எதிரான வாதம் என்னவென்றால், இது ஆல்-ரவுண்டர்களை ஊக்குவிக்காது. ஆனால் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை" என்று கூறினார்.
IPL 2025
இந்த தலைமுறை வீரர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள் (பேட்ஸ்மேன்கள் பந்துவீசுவது). இம்பாக்ட் பிளேயர் விதிமுறையால் அவர்கள் ஊக்கம் இழக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. வெங்கடேஷ் ஐயரைப் பாருங்கள், அவர் இப்போது அற்புதமாக செயல்படுகிறார். புதுமைக்கு இன்னும் இடம் இருக்கிறது.
Dhruv Jurel
இது விளையாட்டை இன்னும் நியாயமானதாக்குகிறது" என்று ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் கூறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் அஸ்வின் மேலும் பேசுகையில், துருவ் ஜூரேல் போன்ற திறமையாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இந்த விதிமுறை தனது அணிக்கு உதவியது என்று வலியுறுத்தினார்.
Ashwin
கவுகாத்தியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் இம்பாக்ட் சப்ஸ்டிடியூட் வீரராக களமிறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் 15 பந்துகளில் 32* ரன்கள் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு அவர் திரும்பிப் பார்க்கவில்லை. பிப்ரவரி 2024 இல் இங்கிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 23 வயதான ஜூரேல் மூன்று டெஸ்ட்களில் 90 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம், மொத்தம் 190 ரன்கள் குவித்துள்ளார்.
Ashwin
“எல்லாவற்றிற்கும் மேலாக, துருவ் ஜூரேல்… இம்பாக்ட் பிளேயர் விதிமுறை இல்லையென்றால், அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது” என்று அஸ்வின் கூறினார். “எனவே பல வீரர்கள் இந்த விதியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். வீரர்கள் வெளிச்சத்திற்கு வர இதுவே ஒரே வழி என்று நான் சொல்லவில்லை, ஆனால் இது அவ்வளவு மோசமானது அல்ல” என்று அஸ்வின் கூறினார்.
இம்பாக்ட் பிளேயர் விதிமுறை பயிற்சியாளர்களுக்கு சில கூடுதல் விருப்பங்களை வழங்குகிறது என்று அஸ்வின் கருத்து தெரிவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியை உதாரணமாக அஸ்வின் சுட்டிக்காட்டினார்.
Ravichandran Ashwin
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஷாபாஸ் அகமதுவை இம்பாக்ட் பிளேயராகக் களமிறக்கியது. 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர், முக்கியமான தருணத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹைதராபாத் அணியின் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். பனி காரணமாக போட்டிகள் ஒருதலைபட்சமாக மாற வாய்ப்புள்ளபோது, இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும் அணிகளுக்கு எதிர்த்துப் போராட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என்று அஸ்வின் கூறினார்.
Ravichandran Ashwin, Ashwin
“நீங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தால், கூடுதல் பந்துவீச்சாளருக்குப் பதிலாக ஒரு பேட்ஸ்மேனை கொண்டு வரலாம். போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக மாறிவிட்டன, கூடுதல் வீரருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. கொல்கத்தா அல்லது மும்பையைத் தவிர வேறு எங்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியின் சொந்த மண்ணில் மட்டும்தான் எல்லாப் போட்டிகளும் 160-170 ரன்களுக்குள் முடிவடைந்தன” என்று அஸ்வின் நினைவு கூர்ந்தார்.