ஒரே ஒரு செஞ்சுரி.. கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ஹிட்மேன் ரோகித்
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மாவின் வரலாற்று சிறப்புமிக்க சதம்
சிட்னி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து உலக சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையில் கோலியை பின்னுக்குத் தள்ளினார். இது அவரது 33வது ஒருநாள் சதம்.
ரோஹித்-கோலி ஆதிக்கத்தால் இந்தியா அபார வெற்றி
இப்போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 237 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா, ரோஹித் (121*), கோலி (74*) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 38.3 ஓவர்களில் வெற்றி பெற்றது.
ரோஹித்தின் 50வது சர்வதேச சத சாதனை
இந்த சதம் ரோஹித்தின் 50வது சர்வதேச சதமாகும். இதன் மூலம், 50+ சர்வதேச சதங்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சச்சின் மற்றும் கோலி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
கோலியின் அற்புதமான கம்பேக்
இரண்டு டக் அவுட்களுக்குப் பிறகு, கோலி இந்தப் போட்டியில் 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஃபார்முக்கு திரும்பினார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் தடுமாற்றம்
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.