- Home
- Sports
- Sports Cricket
- பாஸ் அவரு மேல புகார் கொடுங்க, கோலிக்கு பாதகம், ரோகித்துக்கு சாதகமா? நிதின் மேனனை வச்சு செய்யும் ரசிகர்கள்!
பாஸ் அவரு மேல புகார் கொடுங்க, கோலிக்கு பாதகம், ரோகித்துக்கு சாதகமா? நிதின் மேனனை வச்சு செய்யும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் 2 முறை அவுட்டான இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஒரு முறை கூட நடுவர் நிதின் மேனன் அவுட் கொடுக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

நிதின் மேனன் தவறான முடிவு:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
ரோகித் சர்மா அவுட்
இந்திய அணியில் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுப்மன் கில் இடம் பெற்றிருந்தார். முகமது ஷமியும் அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பெற்றார்.
ரோகித் சர்மாவுக்கு அவுட் மறுப்பு
இந்திய அணியில் கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில் மற்றும் முகமது ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.
நிதின் மேனன்
முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா 2 முறை அவுட்டானாலும் அம்பயர் அவுட் கொடுக்காததால் தப்பினார். மிட்செல் ஸ்டார் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்சானார். ஆனால், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் ரெவியூ எடுக்கவில்லை.
நிதின் மேனன்
இதே போன்று 4ஆவது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதற்கும் அம்பயர் நிதின் மேனன் அவுட் கொடுக்கவில்லை. அதற்கு ரெவியூவும் எடுக்கப்படவில்லை. ஆனால், டிவி ரீப்ளேயில் பந்து ஸ்டெம்பில் படுவது தெளிவாக தெரிந்தது.
https://twitter.com/SwaraMSDian/status/1630811325898326019?s=20
விராட் கோலிக்கு அவுட் கொடுத்த நிதின் மேனன்
இது போன்று அம்பயர் நிதின் மேனன் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு முன்னதாக கூட இந்திய அணியின் வீரர் விராட் கோலிக்கு தவறான முறையில் அவுட் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
https://twitter.com/ajay71845/status/1630782668312043521?s=20
விராட் கோலி
விராட் கோலியின் பேட்டிலும், பேடிலும் ஒரே நேரத்தில் பந்து பட்ட போது நிதின் மேனன் அவுட் எனக்கொடுத்தது சர்ச்சையானது. இதனால் கோலி என்றால் அவுட் கொடுப்பது, ரோகித் சர்மா என்றால் அவுட்டானாலும் நாட் அவுட் கொடுப்பது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நிதின் மேனன்
அதற்கு ஒரு படி மேல் சென்று அவர் மீது புகார் அளிக்க வேண்டும் என்றெல்லாம் டுவிட்டரில் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே ஆஸ்திரேலியா 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், இந்தியா மீதும், மைதானம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அப்படியிருக்கும் போது நிதின் மேனன் அவுட் கொடுக்காதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.