MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 2 ஓவரில் 2 விக்கெட் காலி – தடுமாறும் MI – சஞ்சு சாம்சனின் பிளான் ஒர்க் அவுட் ஆகுது!

2 ஓவரில் 2 விக்கெட் காலி – தடுமாறும் MI – சஞ்சு சாம்சனின் பிளான் ஒர்க் அவுட் ஆகுது!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 38ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 22 2024, 08:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 38ஆவது லீக் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

25
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

முதல் ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். இன்னிங்ஸின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த சர்மா, 2ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். 3 மற்றும் 4ஆவது பந்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. 5ஆவது பந்தில் தூக்கி அடிக்க முயறித்து விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ரோகித் சர்மா 6ஆவது முறையாக டிரெண்ட் போல்ட் ஓவரில் ஆட்டமிழந்துள்ளார்.

35
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

மேலும், போல்ட் தனது முதல் ஓவரில் மட்டுமே இதுவரையில் 26 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பவர்பிளேயில் 2ஆவது முறையாக முதல் விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதன் காரணமாக ரோகித் சர்மா 5 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

45
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

இதே போன்று 2ஆவது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் 2 பந்தில் ஒரு ரன் கூட எடுக்காத இஷான் கிஷான் 3ஆவது பந்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. மீண்டும் போட்டியின் 4ஆவது ஓவரை சந்தீப் சர்மா வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 பவுண்டரி உள்பட 10 ரன்களில் வெளியேறினார்.

55
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:

26* டிரெண்ட் போல்ட்

25 புவனேஷ்வர் குமார்

15 பிரவீன் குமார்

13 சந்தீப் சர்மா

12 தீபக் சாஹர்/ ஜாகீர் கான்.

இந்த போட்டியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். இதுவரையில் 130 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா மொத்தமாக 2450 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 10 அரைசதங்களும் எடுத்துள்ளார். அதோடு, 57 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரோகித் சர்மா
சஞ்சு சாம்சன்
யுஸ்வேந்திர சாஹல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்...ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!
Recommended image2
ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!
Recommended image3
மகுடம் சூடா மன்னன்: 9000 ரன்களை கடந்த முதல் வீரர் - IPL வரலாற்றில் விராட் கோலி புதிய சகாப்தம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved