IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் 4வது பேட்ஸ்மேன்..! புதிய மைல்கல்லை எட்டி ரோஹித் சர்மா சாதனை
ஐபிஎல்லில் 6000 ரன்கள் அடித்த 4வது வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டினார் ரோஹித் சர்மா.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா அதிரடியாக தொடங்கினார். இந்த போட்டியில் ஐபிஎல்லில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ரோஹித் சர்மா. இதன்மூலம் ஐபிஎல்லில் 6000 ரன்கள் அடித்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
IPL 2023: மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகின்றன.. தோனி மட்டும் தான் வீரர்களை உருவாக்குகிறார்..!
ரோஹித் சர்மா 227வது இன்னிங்ஸில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன் விராட் கோலி (6844), ஷிகர் தவான்(6477) மற்றும் டேவிட் வார்னர் (6109) ஆகிய மூவரும் ஐபிஎல்லில் 6000 ரன்களுக்கு மேல அடித்துள்ளனர். ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா.
ஐபிஎல்லில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் ஆடுகிறது. மும்பை அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் ரோஹித் சர்மா நன்றாக ஆட வேண்டும். பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்கும் முனைப்பில் ரோஹித் சர்மா அந்த வேலையை சிறப்பாகவே செய்துவருகிறார்.