#AUSvsIND முதல் வேலையா தொப்பையையும் வெயிட்டையும் குறைச்சே தீரணும்..! வெறித்தனமா ஒர்க் அவுட் செய்யும் ரோஹித்
First Published Dec 7, 2020, 4:56 PM IST
ரோஹித் சர்மா உடல் எடையை குறைக்க தீவிரமாக பயிற்சி செய்துவருகிறார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஐபிஎல்லின் போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் லீக் சுற்றில் சில போட்டிகளில் ஆடாத ரோஹித் சர்மா, நாக் அவுட் மற்றும் ஃபைனல் ஆகிய போட்டிகளில் ஆடினார். ஆனாலும் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெறாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டுவரும் ரோஹித் சர்மா, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான அணியில் இல்லை. கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது குறித்து, டிசம்பர் 11ம் தேதி அவரது ஃபிட்னெஸ் ஆய்வு செய்யப்பட்ட பிறகுதான் தெரியவரும்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?