MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம்: ரோகித் சர்மா முதலிடம்–17 ஆண்டுகளில் ரூ.178.6 கோடி சம்பளம், தோனி ரூ.176.8 கோடி!

ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம்: ரோகித் சர்மா முதலிடம்–17 ஆண்டுகளில் ரூ.178.6 கோடி சம்பளம், தோனி ரூ.176.8 கோடி!

2008 முதல் 2024 வரையிலான ஐபிஎல் சம்பளத்தில் ரோகித் சர்மா முதலிடத்திலும், தோனி இரண்டாவது இடத்திலும், கோலி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 17 சீசன்களில் ரோகித் சர்மா ₹178.6 கோடி சம்பாதித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2 Min read
Rsiva kumar
Published : Sep 11 2024, 08:14 PM IST| Updated : Sep 11 2024, 08:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rohit Sharma

Rohit Sharma

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் 2008ல் தொடங்கியது. அறிமுக சீசன் முதல் லீக் போட்டிகளில் முறையை மாற்றியதோடு மட்டுமின்றி வீரர்களின் வருவாயில் அதிகளவில் பங்களிப்பும் அளித்துள்ளது. பணக்கார விளையாட்டு என்று கூட ஐபிஎல் தொடரை சொல்லலாம். ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவு.

25
Rohit Sharma - Highest IPL Salary

Rohit Sharma - Highest IPL Salary

ஏனென்றால், அதிகளவில் வருமானம் தரக்கூடிய ஒன்று. அந்த வகையில், 2008 முதல் 2024 வரையில் ரோகித் சர்மா, விராட் கோலி, எம்.எஸ்.தோனி ஆகியோர் அதிகபட்ச ஒட்டுமொத்த சம்பளத்தை பெற்றுள்ளனர். அதாவது, இந்திய அணியின் இந்த 3 ஜாம்பவான்களும் 2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் விளையாடி இந்த 17 ஆண்டுகளில் அதிக சம்பளம் பெற்றுள்ளனர்.

35
IPL 2025, Rohit Sharma Highest IPL Salary

IPL 2025, Rohit Sharma Highest IPL Salary

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை டிராபி வென்ற கொடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒட்டு மொத்தமாக 17 சீசன்களில் விளையாடிய ரோகித் சர்மா 178.6 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

இன்சைட் ஸ்போர்ட் நடத்திய அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடர் மூலமாக அதிகளவில் சம்பாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 43 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட மொத்தமாக 6,628 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில், 15 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். அதிகபட்சமாக 109* ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹிட்மேன் ரோகித் சர்மா ஒரு கேப்டனாக 165 போட்டிகளில் விளையாடி சராசரி 28.62 உடன் 4,236 ரன்கள் எடுத்துள்ளார்.

45
MS Dhoni - IPL Salary

MS Dhoni - IPL Salary

2ஆவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவரது வருவாய் பட்டியலில் வெகு தூரத்தில் ஒன்றும் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையாக 5 முறை சிஎஸ்கே அணிக்கு டிராபி வென்று கொடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தோனி ஒட்டு மொத்தமாக 176.8 கோடி சம்பாதித்துள்ளார்.

இதுவரையில் 264 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 24 அரைதங்கள் உள்பட 5234 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 84* ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஒரு கேப்டனாக தோனி 4660 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1040 கோடி ஆகும்.

55
Virat Kohli IPL Salary

Virat Kohli IPL Salary

2008 முதல் 2024 வரை ஒரே அணிக்காக விளையாடியவர் கோலி:

2008 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடி வரும் விராட் கோலி, ஏலத்திற்கு சென்றிருந்தால் ஒரு சாதனையை முறியடிக்கும் அளவிற்கு சாதனையை படைத்திருப்பார். ஆனால், இதுவரையில் அவர் ஏலத்திற்கு செல்லவில்லை. இருப்பினும், விராட் கோலி 17 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 173.2 கோடி வரையில் சம்பாதித்திருக்கிறார்.

இதுவரையில் 252 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8004 ரன்கள் குவித்துள்ளார். இதில், 55 அரைசதங்கள் மற்றும் 8 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1050 கோடி ஆகும். அதிகளவில் வருமானம் ஈட்டும் விராட் கோலி ஐபிஎல் மூலமாக ரூ.173.2 கோடி மட்டுமே 17 ஆண்டுகளில் சம்பாதித்துள்ளார். ஆனால், இவர், ஏலத்திற்கு மட்டும் சென்றிருந்தால் இவரது கணக்கே வேறாக இருந்திருக்கும்.

இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பாதித்த இந்திய ஜாம்பவான்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். தோனி 2ஆவது இடமும், விராட் கோலி 3ஆவது இடமும் பிடித்துள்ளனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
ஐபிஎல் 2025
எம். எஸ். தோனி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ரோகித் சர்மா
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved