ஐபிஎல் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை!
Rohit Sharma Reached 7000 Runs in IPL Cricket : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியின் போது ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த 2ஆவது வீரராக இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
Rohit Sharma Reached 7000 Runs in IPL Cricket : ஐபிஎல் 2025 இறுதி கட்டத்தை எட்டியது. ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது.
எலிமினேட்டர் சுற்று போட்டி
இதையடுத்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோகித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடியால 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது.
ரோகித் சர்மா 81 ரன்கள் குவித்தார்
இந்தப் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா கொடுத்த 2 கேட்ச் வாய்ப்புகளை குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் தவறவிடவே ரோகித் சர்மா 50 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 81 ரன்கள் குவித்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் கொடுத்த கேட்சை ஜெரால்ட் கோட்ஸி தவறவிட்டார். அடுத்த ஓவரில் சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் குஷால் மெண்டிஸ் எளிதான கேட்சை தவறவிட்டார்.
ரோகித் சர்மா 28 பந்துகளில் அரைசதம்
அதன் பிறகு சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா வெறும் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் அவர் 17ஆவது ஓவரில் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி உள்பட இதுவரையில் 271 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 7038 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிக ரன்கள் குவித்த 2ஆவது வீரராக ரோகித் சர்மா சாதனை
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த 2ஆவது வீரராக ரோகித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 8618 ரன்கள் உடன் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 7038 ரன்களுடன் 2ஆவது இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள்
இவரைத் தொடர்ந்து
ஷிகர் தவான் – 6769 ரன்கள்
டேவிட் வார்னர் – 6565 ரன்கள்
சுரேஷ் ரெய்னா – 5528 ரன்கள்
எம்எஸ் தோனி – 5439 ரன்கள்
அதோடு இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாகவும் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளார். அவர் 300 சிக்ஸர்கள் விளாசி இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்
ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்:
கிறிஸ் கெய்ல் – 357
எம் எஸ் தோனி – 364
ரோகித் சர்மா – 302
விராட் கோலி – 291