சிங்கம் களம் இறங்கிடுச்சு: பெங்களூருவில் பயிற்சியை தொடங்கிய ரிஷப் பண்ட்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
ரிஷப் பண்ட்
கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரிஷப் பண்ட்
முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார். தற்போது வரையில் ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் நன்கு குணமடைந்து வருகிறார். ஆனால், மீண்டும் நடைபயிற்சிக்கு கிட்டத்தட்ட 6 முதல் 7 மாதங்கள் வரையில் ஆகும்.
ரிஷப் பண்ட்
மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் முன் அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் மீண்டும் போட்டி கிரிக்கெட்டில் களமிறங்க நிறைய நேரம் எடுக்கும்.
ரிஷப் பண்ட்
ராகுல் மற்றும் இஷான் இரண்டு கீப்பர்களை நாங்கள் இப்போது பார்க்கிறோம், என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார். வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடக்கிறது.
ரிஷப் பண்ட்
இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. தற்போது உள்ள சூழலில் ரிஷப் பண்ட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் இரண்டிலும் அவரால் பங்கேற்க முடியாது.
ரிஷப் பண்ட்
அதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ஆசிய கோப்பை தொடரிலும் ரிஷப் பண்ட் பங்கேற்கமாட்டார். இந்த நிலையில், தான், காயத்தையும் பொருட்படுத்தாமல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
ரிஷப் பண்ட்
இது தொடர்பான புகைப்படத்தையும் ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டாப் மேன் #என்சிஏ என்று பதிவிட்டுள்ளார். அவர் தனது முழங்கால் பகுதியில் பாதுகாப்பு கவசத்தையும் அணிந்திருக்கிறார். அதோடு அருகில் உடற்பயிற்சி பயிற்சியாளரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் கேப்டனாக இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. வரும் 29 ஆம் தேதி டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது.
ரிஷப் பண்ட்
ஏற்கனவே பெங்களூரு தேசிய அகாடமியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது பயிற்சியை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.