- Home
- Sports
- Sports Cricket
- LSG ஓனரா இப்படி? ஆளே மாறிட்டாரே! ரிஷப் பண்ட் குறித்து உருக்கமாக பேசிய சஞ்சீவ் கோயங்கா!
LSG ஓனரா இப்படி? ஆளே மாறிட்டாரே! ரிஷப் பண்ட் குறித்து உருக்கமாக பேசிய சஞ்சீவ் கோயங்கா!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் காயத்துடன் விளையாடிய ரிஷப் பண்ட் குறித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உருக்கமாக பேசியுள்ளார்.

Sanjeev Goenka Praises Rishabh Pant
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய ரிஷப் பண்ட் காயம் அடைந்து 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 4வது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆட முயன்றபோது அந்த பந்து ரிஷப் பண்ட்டின் வலது காலின் ஷுவுக்கு மேல் நேரடியாக தாக்கியது. இதனால் அவர் வலியால் கதறி துடித்தார். உடனடியாக ஷூவை கழட்டி பார்த்தபோது கால் கடுமையாக வீங்கி இருந்தது. காலில் இருந்து ரத்தமும் கொட்டியது.
நாட்டுக்காக வலியுடன் விளையாடிய பண்ட்
இதனால் ரிஷப் பண்ட் வலியால் அலறி துடித்தபடி கோல்ஃப் வண்டி 'ஆம்புலன்ஸ்' மூலம் அழைத்து செல்லப்பட்டார். இதனால் ரிஷப் பண்ட்மீண்டும் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டாம் நாளில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ரிஷப் பண்ட் களமிறங்கினார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் நாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு விளையாடிய பண்ட் அரை சதம் (3 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்) அடித்து அசத்தினார்.
காயத்துடன் போராடி உலக சாதனை
அந்த வலியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அதாவது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 38 போட்டிகளில் 2717 ரன்களை எடுத்து சாதனையை அரங்கேற்றினார். மனம் தளராமல் காயத்துடன் விளையாடிய ரிஷப் பண்ட்டை பல்வேறு தரப்பினரும் பாராட்டினார்கள்.
பண்ட் குறித்து சஞ்சீவ் கோயங்கா உருக்கம்
இந்நிலையில், ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் விளையாடும் அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா பண்ட் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதாவது சஞ்சீவ் கோயங்கா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுடன் போராடினார், சாதனைகளை முறியடித்தார். அணிக்கு உறுதுணையாக நின்றார். இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள். கீப்பராக அதிக 50+ ஸ்கோர்கள். இந்த போராட்டம் என்றென்றும் நினைவுகூரப்படும். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள், சாம்பியன் ரிஷப் பண்ட்'' என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
சஞ்சீவ் கோயங்காவின் இந்த பதிவை பார்த்து, சார்! நீங்களா இப்படி! ஆளே மாறிட்டீங்களே'' என்று புகழ்நது தள்ளி வருகின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடரின்போது லக்னோ அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் படுமோசமாக விளையாடினார். போட்டியில் அவர் அவுட்டாகும்பொதெல்லாம் சஞ்சீவ் கோயங்காவின் கோபத்தை வெளிக்காட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். மேலும் லக்னோ அணி தோற்கும்போது அவர் மைதானத்துள்ளேயே வந்து பொதுவெளியில் ரிஷப் பண்ட்டிடம் அதிருப்தியை வெளிக்காட்டியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.