MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL: மைதானமே சைலண்ட்.. முதல் போட்டியிலேயே கருப்பு பட்டை அணிந்த RCB, SRH வீரர்கள்.. ஏன் தெரியுமா?

IPL: மைதானமே சைலண்ட்.. முதல் போட்டியிலேயே கருப்பு பட்டை அணிந்த RCB, SRH வீரர்கள்.. ஏன் தெரியுமா?

ஐபிஎல் 2026 தொடக்க ஆட்டத்தில் RCB, SRH வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

1 Min read
Author : Rayar r
Published : Mar 28 2026, 08:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026 தொடக்கம்
Image Credit : X

ஐபிஎல் 2026 தொடக்கம்

IPL 2026 தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற RCB அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

24
இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை
Image Credit : ANI

இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை

இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர். கடந்த ஆண்டு அணி ஆர்சிபி அணி முதன் முறையாக கோப்பை வென்றபோது வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களுக்கு அஞ்சலி செல்லும் வகையில் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்துள்ளனர். முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்கள் மற்றும் சின்னசாமி ஸ்டேடியத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
என் உடம்ப பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? இந்திய மீடியாவை வறுத்தெடுத்த மிட்செல் ஸ்டார்க்!
Related image2
ஐபிஎல் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? ஜியோஸ்டாரில் இலவசமா?
34
11 இருக்கைகள் காலி
Image Credit : Asianet News

11 இருக்கைகள் காலி

மேலும் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சின்னசாமி ஸ்டேடியத்தின் 11 இருக்கைகள் காலியாக விடப்பட்டுள்ளது. ''ஆர்சிபி குடும்பத்தின் ஓர் அங்கமாக என்றென்றும் நிலைத்திருக்கும் அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய ரசிகர்களுக்கு நிரந்தர அஞ்சலி செலுத்தும் விதமாக, எம்.சின்னசாமி மைதானத்தில் உள்ள பதினொரு இருக்கைகள், ஓர் நீடித்த நினைவின் அடையாளமாக காலியாக வைக்கப்படும். அவர்களை என்றென்றும் நினைவு கூறுவோம்'' என்று ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

44
இஷான் கிஷன் சாதனை
Image Credit : Getty

இஷான் கிஷன் சாதனை

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். 27 வயது மற்றும் 253 நாட்களில் கேப்டன் பொறுப்பேற்றதன் மூலம், SRH அணியின் இரண்டாவது இளம் கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2018-ல் கேன் வில்லியம்சன் (27 வயது, 244 நாட்கள்) கேப்டனாக இருந்ததுதான் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
என் உடம்ப பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? இந்திய மீடியாவை வறுத்தெடுத்த மிட்செல் ஸ்டார்க்!
Recommended image2
தல தோனி இடத்தை பிடிக்கப்போகும் அந்த தளபதி யார்? சிஎஸ்கே-வின் பிளேயிங் லெவன் இதோ!
Recommended image3
தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடப்போகுது.. அப்போ அடுத்த விக்கெட் கீப்பிங் யார்?
Related Stories
Recommended image1
என் உடம்ப பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? இந்திய மீடியாவை வறுத்தெடுத்த மிட்செல் ஸ்டார்க்!
Recommended image2
ஐபிஎல் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? ஜியோஸ்டாரில் இலவசமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved