MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இனி பெங்களூருவில் ஐபிஎல் இல்லை..! ஹோம் கிரவுண்டை மாற்றும் ஆர்சிபி..! எங்க தெரியுமா?

இனி பெங்களூருவில் ஐபிஎல் இல்லை..! ஹோம் கிரவுண்டை மாற்றும் ஆர்சிபி..! எங்க தெரியுமா?

RCB Moves to Pune Ground: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்றும் ஆர்சிபி அணி தனது ஹோம் கிரவுண்டை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Nov 12 2025, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சோகத்தில் முடிந்த ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம்
Image Credit : social media

சோகத்தில் முடிந்த ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம்

ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன் மூலம் 18 ஆண்டுகால கோப்பை தாகத்தை தணித்தது. ஆனால் ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம் பெரும் சோகத்தில் முடிந்தது. சாம்பியன் ஆர்சிபி அணியைக் காண சின்னசாமி ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சொந்த மைதானத்தை மாற்றும் ஆர்சிபி
Image Credit : Getty

சொந்த மைதானத்தை மாற்றும் ஆர்சிபி

இதற்குப் பிறகு, கர்நாடக மாநில அரசும், பிசிசிஐ-யும் சின்னசாமி ஸ்டேடியத்தில் பெரிய தொடர்களை நடத்த அனுமதி மறுத்து வருகின்றன. இங்கு நடைபெறவிருந்த ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

 சில ஊடக அறிக்கைகளின்படி, இனி சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆர்சிபி அணி தனது சொந்த மைதானத்தை மாற்றும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

ஆர்சிபிக்கு வந்த ஆஃபர்

சின்னசாமி ஸ்டேடியம் சர்ச்சைக்கிடையே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரு ஓபன் ஆஃபர் கொடுத்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, 2026 ஐபிஎல் தொடரில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தை தங்களது ஹோம் கிரவுண்டாக பயன்படுத்திக்கொள்ள ஆர்சிபி-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆர்சிபி மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Related image1
ஆர்சிபி அணியை விற்கப்போறாங்க.!!! போட்டி போடும் 6 நிறுவனங்கள்- யார் யார் தெரியுமா.?
Related image2
RCB: ஆர்சிபி அணி விற்பனை?.. அட! வாங்கப் போவது இவரா? முழு விவரம்!
34
புனேவுக்கு ஹோம் கிரவுண்டை மாற்றும் ஆர்சிபி
Image Credit : Getty

புனேவுக்கு ஹோம் கிரவுண்டை மாற்றும் ஆர்சிபி

இதை உறுதிப்படுத்தும் வகையில், எம்சிஏ-வின் கமலேஷ் ஃபிசல், ''ஆர்சிபி இங்கு போட்டிகளை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், இதுவே ஆர்சிபி-யின் சொந்த மைதானமாக மாறும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. நாங்கள் எங்கள் மைதானத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், புனே இந்த முறை ஆர்சிபி-யின் சொந்த மைதானமாக ஐபிஎல் போட்டிகளை நடத்தும்'' என்று கூறியுள்ளார்.

44
பெங்களூரு ரசிகர்கள் ஷாக்
Image Credit : Getty

பெங்களூரு ரசிகர்கள் ஷாக்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் சின்னசாமி ஸ்டேடியத்திற்கும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. இங்குள்ள ரசிகர்களும் ஆர்சிபி அணியை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். ஆனால், பெங்களூருவில் இருந்து ஆர்சிபி போட்டிகள் மாற்றப்பட்டால் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கு தற்போதைக்கு எந்த பதிலும் இல்லை.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல் 2025
ஐபிஎல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
Recommended image2
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..
Recommended image3
IND vs ENG: இந்திய பவுலர்கள் சொதப்பல்! இங்கிலாந்து மெகா ஸ்கோர்... என்ன காரணம்a?
Related Stories
Recommended image1
ஆர்சிபி அணியை விற்கப்போறாங்க.!!! போட்டி போடும் 6 நிறுவனங்கள்- யார் யார் தெரியுமா.?
Recommended image2
RCB: ஆர்சிபி அணி விற்பனை?.. அட! வாங்கப் போவது இவரா? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved