Ravindra Jadeja, SA vs IND: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா களமிறங்க வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Ravindra Jadeja
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த 26 ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது.
Team India
இதில், டீன் எல்கர் அதிகபட்சமாக 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸ் செய்தது. ஆனால், இதில், தென் ஆப்பிரிக்கா பவுலர்களின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Ravindra Jadeja
இறுதியாக விராட் கோலி மட்டுமே 76 ரன்கள் எடுக்க, இந்திய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
SA vs IND Test Cape Town
இந்த வெற்றியின் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. இதையடுத்து வரும் ஜனவரி 3ஆம் தேதி 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில், ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்து வீசினார்.
SA vs IND 2nd Test
தென் ஆப்பிரிக்கா அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கியது. ஆனால், இந்திய அணியானது 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்று களமிறங்கியது.
SA vs IND
இதில், எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரன்களை வாரி குவித்தனர். ஆனால், ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ஓவர்களில் எல்லாம் கொடுத்த வாய்ப்புகளை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மற்றும் ஸ்லிப் திசையில் நின்றிருந்த சுப்மன் கில் இருவரும் மாறி மாறி கோட்டைவிட்டார். கடைசியாக ஜெரால்டு கோட்ஸியை அஸ்வின் அவுட்டாக்கினார்.
South Africa vs India 2nd Test
முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணாவும் சொல்லிக் கொள்ளும்படி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், எப்படியோ ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதுவரையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒருமுறை கூட கைப்பற்றவில்லை.
Ravichandran Ashwin
ஆனால், இந்த முறை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலேயும் இந்திய அணி கோட்டைவிட்டது. 2ஆவது போட்டியில் எப்படியும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Jadeja
அப்படி வெற்றி பெறவில்லை என்றால், தென் ஆப்பிரிக்கா தான் இந்த முறையும் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக இடம் பெறாத ரவீந்திர ஜடேஜா, 2ஆவது போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ravindra Jadeja
ஆனால், அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தான் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. முதுகுப்படிப்பு காரணமாக இடம் பெறாத ஜடேஜா தற்போது கேப்டவுனில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.