டி20 கிரிக்கெட்டில் தோனியின் ரெக்கார்டை தகர்த்தெறிந்த ஜடேஜா..! 8 வருஷ சாதனைக்கு முற்றுப்புள்ளி

First Published Dec 4, 2020, 8:54 PM IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனியின் 8 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்துள்ளார் ஜடேஜா.

ஜடேஜா கடந்த 2 ஆண்டுகளாகவே அபாரமாக பேட்டிங் ஆடி ரன்களை குவித்துவருகிறார். 2019 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நம்பிக்கையளித்த ஒரே வீரர் ஜடேஜா தான். அதன்பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 13வது சீசனில் கூட, 171 என்ற ஸ்டிரைக் ரேட் மற்றும் 46 என்ற சராசரியுடன் ஆடியிருந்தார்.

அதே ஃபார்மை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தொடர்கிறார். கான்பெராவில் இன்று நடந்த டி20 போட்டியில் 7ம் வரிசையில் களமிறங்கிய ஜடேஜா, 23 பந்தில் 44 ரன்களை விளாசி இந்திய அணி 161 ரன்களை எட்ட உதவினார்.

இந்த போட்டியில் 44 ரன்கள் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 7ம் வரிசையில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். ஏற்கனவே 2012ம் தோனி இங்கிலாந்துக்கு எதிராக 7ம் வரிசையில் இறங்கி 18 பந்தில் 38 ரன்கள் அடித்திருந்தார். அதுதான் டி20 கிரிக்கெட்டில் 7ம் வரிசையில் இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகமான ரன்னாக இருந்தது. தோனியின் அந்த சாதனையை ஜடேஜா தற்போது தகர்த்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?