ஐபிஎல் அனுபவம், Rajasthan Royals அணியின் கேப்டன்ஸி குறித்து பேசிய சஞ்சு சாம்சன்!
Sanju Samson Talk about his IPL EXperience and Rahul Dravid : ஜியோஹாட்ஸ்டார் சூப்பர்ஸ்டார் தொடரில் பேசிய சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

Sanju Samson Talk about his IPL EXperience and Rahul Dravid : நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவொரு அணியும் தயாராகி வருகிறது. ஐபிஎல் வீரர்களும் அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்த தொடருக்கு முன்னதாக ஜியோஹாட்ஸ்டார் சூப்பர்ஸ்டார் தொடரில் பேசிய சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

Rajasthan Royals, Sanju Samson, IPL 2025
அதில், அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் சிறப்பான அணியை உருவாக்கியுள்ளோம். 13 வயது முதல் 35 வயது வரை உள்ள வீரர்களுடன், இளம் திறமையையும் அனுபவத்தையும் ஒருங்கிணைக்கிறோம். கடந்த 3 IPL சீசன்களில், நாங்கள் மிகச்சிறந்த வெற்றிப் பருவங்களை கண்டுள்ளோம். IPL வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கே அதிக வெற்றி சதவிகிதம் கிடைத்த நேரம் இது.
Sanju Samson Share his IPL Experience
உலகம் முழுவதும் உள்ள முக்கிய வீரர்களை கொண்ட அணியாக இருந்தோம், அது ஒரு குடும்பமாக உணர்ந்தது. ஆனால், IPL விதிகளின்படி, அந்த அணியை விட்டுவிட்டு புதிதாக உருவாக்க வேண்டும். இப்போது அதைத்தான் நாம் செய்கிறோம். இளம் வீரர்கள் முதல் அனுபவம் மிக்க வீரர்கள் வரை உள்ள கலவையுடன் ஒரு புதிய அணியை அமைத்துள்ளோம்.
IPL 2025, Sanju Samson
எனக்கு இது புதுவிதமான அனுபவம் தான். புதிய வீரர்களை சந்தித்து, அவர்களுடன் உறவுகளை உருவாக்கி, அவர்களின் ஆளுமையை புரிந்து கொள்வதே உண்மையான மகிழ்ச்சி. IPL 2025 தொடங்குவதற்கு முன்பே அணியின் பயிற்சி காலத்திலிருந்து உண்மையான உழைப்பு தொடங்குகிறது. என் வீரர்களும் பயிற்சியாளர்களும் எவராக இருந்தாலும் அவர்களுடன் நான் பேசுவேன். அந்த ஒற்றுமையை கட்டமைப்பதே எனக்கு மிகவும் முக்கியம். அப்போதுதான் ஒரு குழுவாக நாங்கள் பயணிக்க முடியும். கேப்டனாக இருப்பதன் உண்மையான மகிழ்ச்சி அதில்தான் இருக்கிறது.
Rahul Dravid and Sanju Samson in IPL 2025
சஞ்சு சாம்சன் தனது TATA IPL பயணத்தையும் நினைவுகூர்ந்தார். 2013-ஆம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த போது, IPL-க்கு வந்ததைப் பற்றி அவர் கூறினார். எப்படி சில விஷயங்கள் நடக்கின்றன என்பது உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கிறது. என் முதல் சீசனில், ராகுல் சார் தானே என்னை தேர்வு செய்தார். அவர் அணிக்காக புதிய வீரர்களை தேடிக்கொண்டு இருந்தார். என்னை பார்த்த பிறகு, அவர் என்னிடம் வந்து ‘நீ என் அணிக்காக விளையாடலாமா?’ என்று கேட்டார். அந்த நாளிலிருந்து இன்று வரை, என்னை நம்ப முடியவில்லை.
Rajasthan Royals, IPL 2025
இப்போது நானே அந்த அணியின் கேப்டன். மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு ராகுல் டிராவிட் அணியின் பயிற்சியாளராக திரும்பியிருக்கிறார். இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம். அவர் எப்போதுமே ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே இருந்தார். இந்திய அணியில் இருக்கும் போதும், ராஜஸ்தான் அணியில் இருக்கும் போதும், அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது, அவரின் பயிற்சியில் நானே ஒரு கேப்டனாக செயல்பட வேண்டும் என்பதே மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
Sanju Samson and Rahul Dravid, IPL 2025, Rajasthan Royals
சஞ்சு சாம்சன் கேப்டனாக இருப்பதில் டிராவிட்டின் பங்கு:
"நான் அவரிடம் இருந்து பல நல்ல பயிற்சிகளை கற்றுக்கொண்டேன். கேப்டனாக இருந்தபோது கூட அவர் ஒருபோதும் விருப்ப பயிற்சிகளை தவிர்த்ததில்லை. அணியில் உள்ள இளம் வீரர்களை எப்படி நடத்த வேண்டும், மூத்த வீரர்களுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அணிக் கூட்டங்களை எவ்வாறு நடத்த வேண்டும், புதிய வீரர்களை எப்படி வரவேற்க வேண்டும் என்பவற்றில் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அந்த சிறிய ஆனால் முக்கியமான விஷயங்கள் எனக்கு ஒரு கேப்டனாக இருப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.